வங்கதேசத்தில் இந்து பூசாரியை கொடூரமாக கொன்ற 4 இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை
வங்கதேசத்தில் இந்து பூசாரியை கொடூரமாக கொன்ற 4 இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை

வங்காளதேசத்தில் கோவில் பூசாரியை கொலை செய்த வழக்கில், 4 பேருக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வங்கதேசத்தில் 2013 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் சிறுபான்மை மக்களான இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக இந்து பூசாரிகள் தொடர்ச்சியாக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சகர் மாவட்டத்தை சேர்ந்த கோவில் பூசாரி ஜனேஸ்வர் ராய் என்பவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். ஆனால் உள்நாட்டை சேர்ந்த ஜமாத் அல் முஜாகிதின் என்ற பயங்கரவாத அமைப்பினர்தான் இந்த கொலைக்கு காரணம் என வங்கதேச அரசு கூறியது. மேலும் பூசாரி ஜனேஸ்வர் ராய் கொலை தொடர்பாக ஜே.எம்.பி அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு, தலைநகர் டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
நேற்று முன்தினம் நடந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையில் 4 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, அவர்கள் 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.