Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா ஒழிப்பு: காசோலையை அயன் செய்யும் வங்கி கேசியர்! வைரல் வீடியோ...

கொரோனா ஒழிப்பு: காசோலையை அயன் செய்யும் வங்கி கேசியர்! வைரல் வீடியோ...

கொரோனா ஒழிப்பு: காசோலையை அயன் செய்யும் வங்கி கேசியர்! வைரல் வீடியோ...

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 1:27 PM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், வங்கிகள் உள்பட சில கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் குஜராத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்: அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர் காசோலையை ஒருவரிடம் கொடுக்கிறார். அதை அவர் கேசியரின் கொடுக்கிறார். அதை வாங்கிய கேசியர் அந்த காசோலையை மேஜையின் மேல் இருக்கும் அயன் பாக்ஸ் வைத்து அயன் செய்கிறார். காசோலையில் இருக்கும் கிருமியை ஒழிக்கும் முயற்சி என கூறப்படுகிறது.


இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://twitter.com/anandmahindra/status/1246350738608902145?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1246350738608902145&ref_url=https://www.dailythanthi.com/News/India/2020/04/06165240/I-have-no-idea-if-the-cashiers-technique-is-effective.vpf

Source: https://www.dailythanthi.com/News/India/2020/04/06165240/I-have-no-idea-if-the-cashiers-technique-is-effective.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News