சாதி வெறியை வெளிப்படுத்தும் பிபிசி தமிழ் 'திரௌபதி' விமர்சனம்.!
சாதி வெறியை வெளிப்படுத்தும் பிபிசி தமிழ் 'திரௌபதி' விமர்சனம்.!

திரௌபதி படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்த படம் (நேற்று) 28ம் தேதி வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் வெளியான முதல் காட்சியில் இருந்து தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது. பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியாகும் மக்கள் கூட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த படத்தின் மைய கருத்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களின் பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்களை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து சமுதாய மக்களும் பார்க்கக்கூடிய திரைப்படம் என்றே சொல்லலாம்.
திரௌபதி சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று திமுக ஆதரவு ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக நேற்று பிபிசி தமிழ் வெளியிட்டுள்ள செய்தியில் சாதி வெறியை கக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
இயக்குனர் ரஞ்சித்தை சண்டைக்காரர்கள் என்று நினைக்கிறார்கள். அது துளியும் உண்மை அல்ல. அவர் உரையாடலை விரும்புகிறார். அவர் விரும்பும் அந்த உரையாடலை நிச்சயம் பரியேறும் பெருமாள் நிகழ்த்தும் என்று பிபிசி தமிழ் ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது.
மேலும், மோகன் ஜி எடுத்து திரௌபதி, சாதாரண பழிவாங்கும் கதையாக எடுத்திருந்தாலே சுவாரஸ்யமாக வந்திருக்கக்கூடிய கதையை, கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று படம் பார்ப்பவர்களை சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர் என்று ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது.
இந்த பதிவின் மூலமாக சாதி வெறி அதிகமாகவே காண முடிகிறது. அது எப்படி ரஞ்சித் படம் எடுத்தால் அதனை கொண்டாடும் ஊடகம், மோகன் ஜி படத்திற்கு கீழ்த்தரமான விமர்சனத்தை முன் வைக்கிறது.
இதில் இருந்து தெரிகிறது ஊடகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய சாதியை வெளிப்படுத்துகின்றனர் என்று கூறலாம்.
ரஞ்சித் படம் எடுத்தால் அது புரட்சி என்றும், அதுவே வன்னியர் சமுதாயத்தில் இருந்து படம் எடுத்த மோகன் ஜி சாதி வெறியர்கள் என்று முத்திரை குத்துவதும் இந்த திமுக ஆதரவு ஊடகங்களின் வேலையாகவே வைத்துள்ளனர்.
இவர்களின் சதியை முறியடித்து திரௌபதி வெற்றிகரமாக தமிழகம் மட்டுமின்றி உலக முழுவதும் வெளியாகி சரித்திரம் படைத்து கொண்டிருக்கிறாள்.