Kathir News
Begin typing your search above and press return to search.

தனது கருத்துக்கு தானே பதிலடி கொடுத்துக் கொண்ட 'Befitting Reply' புகழ் நடிகை டாப்ஸி!

தனது கருத்துக்கு தானே பதிலடி கொடுத்துக் கொண்ட 'Befitting Reply' புகழ் நடிகை டாப்ஸி!

தனது கருத்துக்கு தானே பதிலடி கொடுத்துக் கொண்ட Befitting Reply புகழ் நடிகை டாப்ஸி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 July 2020 10:27 AM GMT

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் நடித்து பிபலமடைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து தகுதி இல்லாதவர்கள் சொந்த பந்தங்களின் தொடர்பு மூலம் அதிக வாய்ப்புகளைப் பெறும் Nepotism குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. இது குறித்து பல பாலிவுட் பிரபலங்களும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை டாப்ஸி பன்னுவும் தன் பங்குக்கு கருத்தூ தெரிவித்துள்ளார். சமீபத்தில் Nepotism பற்றிய கேள்விக்கு பதிலளித்து இருந்த அவர் காட்ஃபாதர்‌ போன்று ஒருவரின் உதவி இல்லாமல் பாலிவுட்டில் பிழைப்பது கடினம் என்று கூறியிருந்தார். பாலிவுட் துறையில் இருப்பவர்களின் குடும்பத்தில் பிறந்தவர்களோடு ஒப்பிடும் போது எந்த விதமான பின்னணியும் இன்றி வருபவர்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள நீண்ட நாட்களாகும் என்றும் இந்த காரணியால் தான் கூட பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டாப்ஸி தன்னிடம் கேள்வி கேட்பவர்களுக்கு 'சரியான பதிலடி' கொடுக்கும் நடிகை என்று ஊடகங்கள் அவரைக் கொண்டாடுவது வழக்கம். இப்பொழுது அவருக்கு அவரே 'சரியான பதிலடி' கொடுத்துக் கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2017ல் பிங்க் வில்லா இணையதளத்திற்கு பேட்டியளித்த போது தற்போது கூறியுள்ள கருத்துகளுடன் சற்றும் பொருந்தாத கருத்துக்களைக் கூறியுள்ளார். "Nepotismஆல் சில வாய்ப்புகள் கை நழுவிப் போகலாம். ஆனால் வேறு வாய்ப்புகள் கண்டிப்பாகக் கிடைக்கும்" என்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக பின்னணி உள்ளவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் மீதே பழி போட்டுக் கொண்டிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

தனக்கு அவ்வளவாக நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும் ஆனால் அது தனக்குச் சாதகமாகவே இருந்தது என்றும் கூறிய அவர், "தொடர்புகள் இல்லையென்றாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்தே தீரும். அதற்கு நானே சிறந்த உதாரணம்" என்று கூறியிருக்கிறார். தங்கள் பெயர் செய்தியில் அடிபட்டுக் கொண்டே இருந்தால் தான் மார்க்கெட் நிலைக்கும் எண்ணத்தில் தங்களது துறை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூட சொந்தக் கருத்து என்ற ஒன்றைக் கூறாத இவர்கள் தான் தேசத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று அறிவுரை கூற வந்துவிடுகிறார்கள்.


நன்றி: Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News