Kathir News
Begin typing your search above and press return to search.

பீகார்: "பண மதிப்பிழப்பு செய்த நீங்கள் ஒரே இரவில் கொரானா வைரஸ் தடுப்பூசி கொண்டு வர முடியாதா?" உளறிக் கொட்டும் லாலுவின் மகன்.! #Bihar #TejPratapYadav

பீகார்: "பண மதிப்பிழப்பு செய்த நீங்கள் ஒரே இரவில் கொரானா வைரஸ் தடுப்பூசி கொண்டு வர முடியாதா?" உளறிக் கொட்டும் லாலுவின் மகன்.! #Bihar #TejPratapYadav

பீகார்: பண மதிப்பிழப்பு செய்த நீங்கள் ஒரே இரவில் கொரானா வைரஸ் தடுப்பூசி கொண்டு வர முடியாதா? உளறிக் கொட்டும் லாலுவின் மகன்.! #Bihar #TejPratapYadav

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 2:28 AM GMT

ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவரும், தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் லாலு பிரசாத் யாதவின் மகனுமாகிய தேஜ் பிரதாப் யாதவ் மீண்டும் செய்திகளில் வந்துள்ளார். வியாழக்கிழமை அன்று இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அவர் கூறிய வினோதமான ஒப்புமைகளும், குற்றச்சாட்டுகளும் நகைச்சுவைப் புயலை ஏற்படுத்தின.

அவர் வெளியிட்ட வீடியோவில், பீகாரில் உள்ள மாநில அரசு கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறினார். அதை உண்மை என நிரூபிக்க, தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாருக்கே கொரோனா வைரஸ் வந்து விட்டதாக குற்றம் சாட்டினார். நிதீஷ்குமார் தனது தம்பி தேஜஷ்வி யாதவைப் போல குடிமக்களிடையே அல்லாமல், வீட்டுக்குள்ளேயே இருக்கத் தேர்ந்தெடுத்ததற்கு இதுவே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், "ஆகஸ்ட் 15 முதல் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கிடைக்கும் என்று நரேந்திர மோடி கூறினார். இவ்வளவு தாமதமாக இது ஏன் கிடைக்க வேண்டும்? ஏராளமான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்… பீகாரில் ஒவ்வொரு நிமிடமும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இன்றிரவு தடுப்பூசியைத் தொடங்குங்கள்… ஆம், இன்றிரவு அதைத் தொடங்குங்கள். ஒரே இரவில் நீங்கள் பணத்தை மதிப்பிழக்க வைக்க முடிந்தால், நீங்கள் தடுப்பூசியையும் தொடங்கலாம்," என்று அவர் சம்பந்தமே இல்லாமல் ஒப்பீடு செய்தார்.

"நீங்கள் (நிதீஷ் குமார்) என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதால் நீங்கள் தூங்குகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.

பீகாரின் முன்னாள் சுகாதார அமைச்சரான இவர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கருத்துக்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, பெயர்களை குறிப்பிடாமல், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை ஒரு "வைரஸ்" என்றும், "தடுப்பூசி" குறித்து காவல்துறையினர் விசாரிப்பதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு, அவர் தன்னையும் தனது சகோதரர் தேஜஷ்வியையும் முறையே கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனுடன் ஒப்பிட்டார். தனக்கும் அவரது சகோதரருக்கும் இடையில் யார் வர முயன்றாலும் சுதர்சன் சக்ரத்தால் (பகவான் கிருஷ்ணரின் ஆயுதம்) கொல்லப்படுவார் என்று அவர் கூறினார்.

Source:https://www.instagram.com/tv/CC88w6lA96V/?utm_source=ig_embed

Next Story