Kathir News
Begin typing your search above and press return to search.

எதுக்கு 12th வச்சுருக்கீங்க..? அண்ணாமலை பெயரில் போலி செய்திகளை பரப்பும் தமிழக மீடியாக்கள் - உருப்படியா ஒரு நல்ல செய்தி கிடைக்குதா பாருங்க!

எதுக்கு 12th வச்சுருக்கீங்க..? அண்ணாமலை பெயரில் போலி செய்திகளை பரப்பும் தமிழக மீடியாக்கள் - உருப்படியா ஒரு நல்ல செய்தி கிடைக்குதா பாருங்க!

எதுக்கு 12th வச்சுருக்கீங்க..? அண்ணாமலை பெயரில் போலி செய்திகளை பரப்பும் தமிழக மீடியாக்கள் -  உருப்படியா ஒரு நல்ல செய்தி கிடைக்குதா பாருங்க!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Sep 2020 8:35 AM GMT

மத்திய அரசின் திட்டப்படி நீட் தேர்வை நேற்று (செப்டம்பர் 13) அன்று நடத்தி முடித்தது. இந்த நிலையில், பெற்றோர்களின் நிர்பந்தம், நீட் தேர்வு குறித்து தமிழக மீடியாக்கள் ஏற்படுத்தி வைத்துள்ள பயத்தின் காரணமாக அடுத்தடுத்து நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதற்கு நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அதில், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மக்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து, தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை உண்மை என சில ஆன்லைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் உண்மை தன்மை குறித்து கதிர் செய்திகள் ஆராய்ந்ததில், அது பொய் என தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் போலி செய்தி:



"12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க? அது போலதான் #NEET entrance. இந்தியா முழுவதும் தமிழ் மாணவர்களுக்கு கிடைக்ககூடிய மருத்துவ படிப்பை பெறுவதற்கான வாய்ப்பாக பாருங்கள்" என்று அண்ணாமலை பெயரில், வேறு யாரோ ஒருவரால் போலியாக உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை உண்மை என்று நம்பி வெளியான செய்திகள்:




இதற்கு மறுப்பு தெரிவித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவு:



https://twitter.com/annamalai_kஎன்பது தான், தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு. https://twitter.com/Annamalai_BJPஎன்பது போலியாக உருவாக்கப்பட்டுள்ள ட்விட்டர் கணக்காகும். ஊடகங்கள் ஒரு தகவலை பகிரும் முன் சம்பந்தப்பட்டவரின் அதிகாரப்பூர்வ கணக்கு எது என்று வேறுபடுத்தி பார்த்து பதிவிட வேண்டும். அண்ணாமலை ட்விட்டில் மட்டும் அல்ல, தமிழக மீடியாக்கள் பல செய்திகளை இப்படித்தான் மக்களிடம் தவறாக கொண்டு சேர்க்கின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டால், பல அரசியல் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News