பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் தரும் ஒரே கட்சி பா.ஜ.க. தான் - தமிழக பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் தரும் ஒரே கட்சி பா.ஜ.க. தான் - தமிழக பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

தமிழக பா.ஜ.க. தலைவராக திரு.எல்.முருகன் தேர்வில் அகில இந்திய பா.ஜ.க. வின் நிலை குறித்து தமிழக பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பின் வருமாறு கூறியுள்ளார்.
பா.ஜ.க. முற்படுத்தப்பட்டோர் கட்சி, பிராமணர்களின் கட்சி என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உடைக்கப்பட்டிருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக பா.ஜ.க தலைவராவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே 2000 - 2003-ம் ஆண்டு டாக்டர் கிருபாநிதி தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்தார். தேசிய அளவில் பா.ஜ.க தலைவராக பங்காரு லக்ஷ்மணன் பதவி வகித்திருக்கிறார்.
பட்டியலின மக்களுக்கு ஆதரவாகப் பேசி வரும் எந்தக் கட்சியுமே, அவர்களுக்கு இதுவரை பொறுப்புக் கொடுக்கவில்லை. தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பட்டியலினத்தவருக்குப் பெரிய பொறுப்புகள் கொடுக்கவில்லை.
இதன்மூலம் பா.ஜ.க தாழ்த்தப்பட்டோருக்கான கட்சி என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் பா.ஜ.க தனது நிர்வாகிகள் தேர்வில் உள் ஒதுக்கீடு செய்து வருகிறது. அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாவிட்டால், அந்த மாவட்ட நிர்வாகிகள் தகுதி இழந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு உள் ஒதுக்கீடு முறையைத் தீவிரமாகப் பின்பற்றும் கட்சி பா.ஜ.க'' என்றார்.