திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் 158 இடங்களில் 157 இடங்களைப் பிடித்து வாகை சூடிய பா.ஜ.க. ! கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே ஒரு இடம்தான்!
திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் 158 இடங்களில் 157 இடங்களைப் பிடித்து வாகை சூடிய பா.ஜ.க. ! கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே ஒரு இடம்தான்!

திரிபுராவில் சென்ற வியாழக்கிழமையுடன், 2 கட்டங்களாக நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தது. நகர்புற வார்டுகளையும் சேர்த்து மொத்தம் 158 இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.
இந்த 158 இடங்களில், போட்டியிடாமல் 91 இடங்களை பா.ஜ.க. வென்றதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கூறினார்.
சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் நடைபெற்ற 67 இடங்களில் 66 இடங்களை பா.ஜ.க. வென்றதாக திரிபுரா மாநில தேர்தல் ஆணையம் (டி.எஸ்.இ.சி.) அறிவித்தது.
வெற்றி பெற்ற இந்த இடங்கள் வெவ்வேறு நகராட்சி அமைப்புகள் மற்றும் அகர்தலா மாநகராட்சி முழுவதும் பரவியிருந்தன. பா.ஜ.க. இழந்த ஒரே இடம் பானிசாகர் நகராட்சி மன்றம் மட்டுமே. இந்த இடம் மட்டும் சி.பி.ஐ (எம்) க்குச் சென்றது.
இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வுக்கு வாக்களித்த திரிபுரா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நன்றி தெரிவித்தார். இது மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று கூறினார்.
சி.பி.ஐ. (எம்) வென்ற வடக்கு திரிபுரா மாவட்டத்தின் பானிசாகர் நகராட்சி அமைப்பில் ஒரு இடத்தைத் தவிர 99.37 சதவீத இடங்களை பா.ஜ.க. வென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.