பகீர் தகவல்!! கிறிஸ்துவ அனாதை இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 குழந்தைகளின் கல்லறைகள்!
பகீர் தகவல்!! கிறிஸ்துவ அனாதை இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 குழந்தைகளின் கல்லறைகள்!

கத்தோலிக்க மிஷனரிகள் சேர்ந்த ஆதரவற்ற அனாதை இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 குழந்தைகளின் கல்லறைகள் தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.
சண்டே போஸ்ட் மற்றும் பிபிசி நடத்திய விசாரணையில், கத்தோலிக்கர்களால் நடத்தப்படும் ஸ்மிலம் பார்க் அனாதை இல்லத்தின் இருண்ட ரகசியம் குறித்து ஆராயப்பட்டது. ஒன்றரை நூற்றாண்டு காலமாக இயங்கி வந்த அனாதை இல்லம் கன்னியாஸ்திரிகள் மற்றும் ஊழியர்களின் கல்லறைகள் ஒரு பக்கம் வைத்திருந்தாலும், புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 402 குழந்தைகளின் கல்லறை குறித்து எந்த பதிவும் செய்யாமல் இருந்துள்ளனர்.
பிபிசியின் கூற்றுப்படி, "இறந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்பதைக் காட்டுகிறது. இறந்தவர்களில் இருபத்து நான்கு பேர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள், பெரும்பாலான இறப்புகள் 1870 மற்றும் 1930 க்கு இடையில் நிகழ்ந்தன.
இது போன்ற ஆதரவற்ற இல்லங்கள் பெரும்பாலும் மர்மமான இல்லங்களாகவேதான் உள்ளன. ஆதரவற்ற குழந்தைகள் ஆதரவற்ற முதியவர்கள் ஆகியவர்களை பயன்படுத்தி,ஆபத்தான மருத்துவ பரிசோதனைகள், உடல் உறுப்பு திருட்டு போன்ற வேறு ஏதும் சதி செயலில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
சில காலத்திற்கு முன்பு சென்னைக்கு பக்கத்திலும் இதேபோல சந்தேகமான முறையில் ஆதரவற்ற வயதானவர்கள் இல்லத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.