Kathir News
Begin typing your search above and press return to search.

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு எதிரொலி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூடும் மவுசு.! #BoycottChina #MadeInIndia

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு எதிரொலி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூடும் மவுசு.! #BoycottChina #MadeInIndia

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு எதிரொலி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூடும் மவுசு.! #BoycottChina #MadeInIndia

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 2:19 PM GMT

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையேயான மோதலுக்குப் பின்னர் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதற்கான நாடு தழுவிய பிரச்சாரத்தின் மத்தியில், 'மேட் இன் இந்தியா' பொம்மைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக உள்நாட்டு பொம்மைத் தொழில் புத்துயிர் பெறுகிறது என்று ANI செய்திகள் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, குஜராத்தின் ராஜ்கோட்டில் பொம்மை உற்பத்தியாளர்கள், இந்திய தயாரிப்புகளுக்கு தேவை அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளனர்.

"சீன எதிர்ப்பு மனநிலை நிலவுவதால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை மக்கள் கோருவது அதிகரித்துள்ளது" என்று அதிதி டாய்ஸின் இணை இயக்குனர் சுபாஸ் ஜலா கூறியுள்ளார்.

அதிதி டாய்ஸின் மற்றொரு இணை இயக்குனர் அரவிந்த் ஜலா கூறுகையில், "80- 90% பொம்மைத் தேவைகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பொதுவாக பூர்த்தி செய்யப்படுகிறது இருப்பினும், கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, இந்திய பொருட்களுக்கான தேவை உயர்ந்துள்ளது" என்றார்.

"இதுபோன்ற தேவை அதிகரிப்பதன் மூலம், உள்நாட்டு சந்தையை வளர்ப்பதற்கும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், இந்திய பொருளாதாரத்தை உயர்த்த உதவுவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும்" என்று அரவிந்த் கூறியுள்ளார்.

தனது பொம்மை நிறுவனம் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் 100க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்றார்.

"ஒரு வருடத்தில், நாங்கள் 200 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை தயாரிப்போம், இதனால் இந்திய சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் பொம்மை தொழில்முனைவோர் மிகக் குறைவு என்று கூறும் அரவிந்த், பொம்மைத் தொழில் செய்வதில் இந்திய தொழில் முனைவர்கள் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

Next Story