Kathir News
Begin typing your search above and press return to search.

லஷ்மனனுக்கு அனுமன் எப்படி உதவினாரோ, அது போன்று எங்க மக்களுக்கு உதவுங்கள். பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்.!

லஷ்மனனுக்கு அனுமன் எப்படி உதவினாரோ, அது போன்று எங்க மக்களுக்கு உதவுங்கள். பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்.!

லஷ்மனனுக்கு அனுமன் எப்படி உதவினாரோ, அது போன்று எங்க மக்களுக்கு உதவுங்கள். பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 3:16 AM GMT

கொரோனா வைரஸ் உலக மக்களையும் பல்வேறு நாட்டின் அரசாங்கங்களையும் மிரட்டி வருகிறது.

இதுவரைக்கும் 15 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலைக்கு நடுவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்துகளை பல்வேறு நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிக்குளோரோயின் எனும் மலேரியாவுக்கான தடுப்பு மருந்து முக்கியமானதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய மக்களுக்கு அதிகளவு பாதிப்பு அடைந்தால் அவர்களின் தேவையை கருதி ஏற்றுமதி செய்வதற்கு அரசு தடை விதித்தது.

இதனிடையே அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும். உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சிக்குளோரோயினை கொடுத்து உதவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் ஏற்றுமதி தடையை விலக்கினார். அமெரிக்கா, இலங்கை உட்பட 30 நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா பட்டியலில் இடம் பெறாத பிரேசில் தங்களுக்கும் ஹைட்ராக்சிக்குளோரோயின் மருந்தை கொடுத்து உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் போல்சனரோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ராமாயணத்தில், ராமனின் தம்பி லட்சுமனனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமன் சஞ்சீவி மூலிகையை இமயமலையில் இருந்து கொண்டு வருவதைப்போல், கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில், கண் தெரியாதவர்களுக்கு பார்வையை மீட்டெடுக்கும் இயேசுவை போன்று பிரேசில் மக்களுக்கும் இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவும், பிரேசிலும் ஒன்றினைந்து செயல்பட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story