Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING : இந்தியா - சீனா மோதலில் 5 சீன வீரர்களும் பலியானதாக தகவல் - 11 வீரர்கள் காயம் : கதறும் சீனா ஊடகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Jun 2020 9:17 AM GMT

லடாக் பகுதியில் நடந்த மோதலில் 5 சீன வீரர்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனா எல்லையில் கால்வான் பள்ளத்தாக்கில் விரிவாக்கம் செய்யும் போது, ​​திங்கள்கிழமை இரவு இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளுடன் வன்முறை நடந்தது என்று ராணுவம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கே இரு தரப்பு இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்க இருதரப்பு ராணுவ அதிகாரிகள் அந்த இடத்தில் சந்திக்கின்றனர் என்றும் ராணுவம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், லடாக் பகுதியில் நடந்த மோதலில் 5 சீன வீரர்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சீனா தரப்பில் 11 வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Next Story