Kathir News
Begin typing your search above and press return to search.

#BREAKING: நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

#BREAKING: நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 12:09 PM GMT

சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்து விட்டு போனை துண்டித்து உள்ளன். இதை அடுத்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள ஈஞ்சாபக்கத்தில் இருக்கும் நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைக்கு பின்பு இது வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது பற்றி நீலாங்கரை காவல்துறை சைபர் கிரிம் காவல்துறை உதவி கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தகவல் கிடைத்துள்ளது. தற்போது விழுப்புரம் காவல் துறையினர் மிரட்டல் விடுத்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News