Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி ராமர் கோவில்: அடிக்கல் நாட்ட பயன்படுத்தப்பட்ட முதல் செங்கல் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தினுடையது!

அயோத்தி ராமர் கோவில்: அடிக்கல் நாட்ட பயன்படுத்தப்பட்ட முதல் செங்கல் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தினுடையது!

அயோத்தி ராமர் கோவில்: அடிக்கல் நாட்ட பயன்படுத்தப்பட்ட முதல் செங்கல் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தினுடையது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 7:52 AM GMT

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகெங்கும் இருக்கும் இந்துக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்த ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வு இனிதே நிறைவுற்றுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வை இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஷ்டிரிய சுயம்சேவக சங்கத் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்த இந்த நிகழ்வில் நாட்டின் ஆட்சியாளர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதோடு ராமர் கோவில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக பயன்படுத்தப்பட்ட முதல் செங்கல் காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் இருந்து அனுப்பப்பட்டது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.கவினர், பெரியாரிஸ்டுகள் மற்றும் பிற தமிழ் தேசியவாதிகள் ராமர் கோவில் கட்டுமானத்தை எதிர்த்தும் ராவணன் தான் தங்கள் கடவுள் என்றும் வயிற்றெரிச்சல் தாங்காமல் புலம்பி வரும் நிலையில் தமிழகம் ஸ்ரீ ராமரின் பூமி என்று நிரூபிக்கும் விதமாக ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின் முதல் செங்கல் காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தால் அளிக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Next Story