பிரதமர் மோடியின் ஐடியாவை பின்பற்றிய பிரிட்டன்..
பிரதமர் மோடியின் ஐடியாவை பின்பற்றிய பிரிட்டன்..

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை பற்றி மார்ச் 20ஆம் தேதி டிவி வழியாக பிரதமர் மோடி பேசினார்.
கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் மார்ச் 22ம் தேதி மக்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். மேலும் தன்னையும் மற்றும் தன் குடும்பத்தாரையும் பெரிதாக நினைக்காமல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தீவிரமாக பணி செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் வீட்டு வாசலில் நின்று 5 நிமிடம் கைகளை தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.
மோடியின் இந்த வேண்டுகோளை ஏற்று சென்ற 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கைகளை தட்டி நன்றியை தெரிவித்தனர்.
மோடியின் இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்த பிரிட்டனிலும் நேற்று முன்தினம் மக்கள் தங்களின் கைகளை தட்டி மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் தங்களுடைய நன்றியை தெரிவித்தனர். இதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவரும் தங்களின் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர்.