4% அகவிலைப்படி உயர்வு வழங்கிய மோடி சர்க்கார் - அரசு ஊழியர்கள் அளவற்ற மகிழ்ச்சி!
4% அகவிலைப்படி உயர்வு வழங்கிய மோடி சர்க்கார் - அரசு ஊழியர்கள் அளவற்ற மகிழ்ச்சி!

பணவீக்கத்தால் விலைவாசி உயர்வு, செலவுகள் அதிகரிக்கும் போது, அதை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அவ்வப்போது அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்படும் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும்.
இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்கள் நல்ல மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்ற ஆண்டு இதுவரை யாரும் செய்யாத வகையில் முதன்முறையாக 5 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.