அமைச்சரவை கூட்டம்.. சமூக இடைவெளியை கடை பிடிக்கும் பிரதமர் மோடி..
அமைச்சரவை கூட்டம்.. சமூக இடைவெளியை கடை பிடிக்கும் பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாக பரவுகின்றது.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொண்டார்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இன்னும் கொரோனா பாதிப்பு உணராமல் ஆங்காங்கே வெளியே செல்வதை காண முடிகிறது.
இதனால் எளிதில் நோய் தொற்று ஏற்படும். தயவு செய்து 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் தங்கள் வீடுகளில் இருந்தால் அனைவரும் நலமாக வாழலாம்.
இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.
இதனை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று முழுவதும் இந்தியாவை விட்டு வெளியேறும் வரைக்கும் சிறிது இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் நன்று.