பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு மாநில தலைமை பொறுப்பை தி.மு.க தி.க உள்ளிட்ட கட்சிகள் அளிக்குமா?
தமிழக பா.ஜ.க தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளர். தி.மு.க, தி.க உள்ளிட்ட கட்சிகளில் இது சாத்தியமா?

மத்திய அரசு நியமனத்தின் படி தெலங்கானா ஆளுநராக Dr. தமிழிசை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு, தமிழகத்தின் அடுத்த பா.ஜ.க தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது.
இதனை அடுத்து, தமிழக பா.ஜ.க தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் திரு. எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்று திராவிட இயக்கங்கள், காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் பிரச்சராம் செய்து வந்த நிலையில், எல்.முருகனின் நியமனம் அந்த விமர்சனங்களை தவுடிபொடி ஆக்கியுள்ளதாக தெரிகிறது.
இது ஒரு புறம் இருக்க, தி.மு.க, தி.க உள்ளிட்ட கட்சிகள் பட்டியிலின மக்களை வாக்கு வங்கியாக மட்டும் தான் பார்க்கின்றதே தவிர, அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பது பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. 69% இட ஒதுக்கீடு கூட மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா தான் கொண்டுவந்தார். தி.மு.க பட்டியலின மக்களுக்கு என்ன செய்தது என்பது கேள்விக்குறியே?
நாங்கள் தான் பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று எப்போதும் கூறிக்கொள்ளும் தி.மு.க, தி.க உள்ளிட்ட கட்சிகள், தனது தலைமை பொறுப்பை ஒரு பட்டியலினத்தவருக்கு அளிக்குமா? என்ற கேள்வி சில தசாப்தங்களாக அரசியல் விமர்சர்கள் முன் வைக்கும் கேள்வி.
ஆனால், பட்டியலின மக்களின் விரோதி என்று விமர்சிக்கப்பட்ட பா.ஜ.க தனது மாநில தலைமை பொறுப்பை பட்டியலின சமூகத்திலிருந்து ஒருவருக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், உண்மையில் பட்டியலின சமூகத்தினர் மீது அக்கறை கொண்டுள்ள கட்சி எது என்ற கேள்வி மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.