Kathir News
Begin typing your search above and press return to search.

ரொம்ப நேரம் வெயில்ல நிற்க முடியல - வீட்டுக்கே வந்து முதியோர் உதவித் தொகைய கொடுங்க சாமி, கோரிக்கை வைக்கும் மூதாட்டி.

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 5:02 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூபாய் இரண்டாயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த மாதத்திற்க்கான முதியோர் ஓய்வூதியம் மற்றும் கொரோனா நிவாரண நிதி ஆகியவை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனை பெறுவதற்காக வங்கி வாசல்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது குறிப்பாக முதியவர்களே அதிக அளவில் வெயிலில் சமுக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மேலும் 60 வயதை கடந்தவர்களுக்கு மிக எளிதாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தங்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் நிவாரண நிதியை தங்கள் வங்கி கணக்கில் சொல்லுத்தாமல் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அங்கன்வாடிகள் முலம் தங்கள் இல்லத்தில் வந்து அளிக்கும் படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.முதியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு???

Next Story