Kathir News
Begin typing your search above and press return to search.

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட கார் உரிமையாளர் ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்பை சேர்ந்தவன்

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட கார் உரிமையாளர் ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்பை சேர்ந்தவன்

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட கார் உரிமையாளர் ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்பை சேர்ந்தவன்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2019 6:30 PM GMT


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் அனுதாபியான ஆதில் என்பவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநில போலீசாரின் விசாரணையில் இருந்த புல்வாமா தாக்குதல் தொடர்பான வழக்கை கடந்த 23-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படையினர் கண்டுபிடித்துள்ளனர். மாருதி இக்கோ (Maruti Eeco) ரகத்தை சேர்ந்தது. அதன் உரிமையாளரான சாஜத் பட் என்பவன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டம், பிஜ்பேஹாரா பகுதியை சேர்ந்தவன்.




https://twitter.com/ANI/status/1100027961355337733?s=19


புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் தலைமறைவாகி விட்ட இவனும் ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன். கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி முன்னர் சமூக வலைத்தளங்களில் இவன் சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளான் என்று தேசிய புலனாய்வு படையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.




https://twitter.com/ANI/status/1100029411066298368?s=19


இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News