Begin typing your search above and press return to search.
ஒற்றுமையின் சிலை Olx ல் விற்பனை, பதிவிட்ட நபர் மீது வழக்குப் பதிவு!
ஒற்றுமையின் சிலை Olx ல் விற்பனை, பதிவிட்ட நபர் மீது வழக்குப் பதிவு!

By :
குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகின் மிக உயரமான சிலை அமைந்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை கட்டவும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் 30,000 கோடிக்கு ஒற்றுமையின் சிலை விற்பனைக்கு உள்ளது என பிரபல OLX இணையதள பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த ஒற்றுமையின் சிலையின் நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தது. அதன்பேரில் பல பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையின் மர்ம நபரை தேடி வருகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள துணை ஆணையர் நீலேஷ் தூபே, OLX நிறுவனம், தகவலை சரிபார்க்கமல் பதிவேற்றிவிட்டதாகவும், அந்த நிறுவனம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story