ஏப்ரல் 20க்கு பின் எவையெல்லாம் இயங்கும், எவையெல்லாம் இயங்காது, மத்திய அரசு புதிய அறிவிப்பு.!
ஏப்ரல் 20க்கு பின் எவையெல்லாம் இயங்கும், எவையெல்லாம் இயங்காது, மத்திய அரசு புதிய அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், வருகின்ற 20ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப் பின்னர் சில நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்'' எனத் தெரிவித்தார்.
அதன்படி, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும். எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம்.
மேலும் சிறு, குறு தொழில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.