Kathir News
Begin typing your search above and press return to search.

என்னது சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறாரா ?

என்னது சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறாரா ?

என்னது சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறாரா ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 5:03 AM GMT

1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'மிணிசித்திரதாழு' . அப்படத்தினை ஒரு நாள் தொலைகாட்சி ஒளிபரப்பில் பார்த்து ரசித்த பி.வாசு அதன் உரிமையை வாங்கி அதனை ஜனரஞ்சகமாக மாற்றி கன்னடத்தில் விஷ்ணு வர்தனை வைத்து 2004ம் ஆண்டில் 'ஆப்தமித்ரா' எனும் பெயரில் இயக்கியிருந்தார். அதனைப் பார்த்த ரஜினி அப்படத்தினை தமிழில் செய்ய எண்ணி பி.வாசுவுக்கு வாய்ப்பளித்தார். மீண்டும் தமிழுக்கு ஏற்றவாறு கதையினை மாற்றியமைத்தார்.

2005ம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, நயந்தாரா நடிப்பில் வெளியான 'சந்திரமுகி', தமிழ் திரையுலகம் அது வரை கண்டிராத பிரமாண்ட வெற்றி பெற்று சுமார் 890 நாட்கள் ஓடியது.

'பாபா' படம் தோல்வியடைந்ததையடுத்து பலரும் ரஜினியின் திரையுலக வாழ்க்கை அவ்வளவு தான் என்று கூறிவந்த நிலையில் தமிழ் திரையுலகில் தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி என ரஜினி மீண்டும் நிரூபித்த படம் 'சந்திரமுகி'.

நீண்ட காலமாகவே சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்து வருகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

பி.வாசு ராகவா லாரன்சை அணுகி திரைக்கதை விவாதித்தவுடன் அது அவருக்குப் பிடித்துப் போக, உடனடியாக ரஜினியைச் சந்தித்து அவரது ஒப்புதலையும் ஆசியையும் ராகவா லாரன்ஸ் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு முன் பணமாக 3 கோடி ரூபாய் பெற்ற ராகவா லாரன்ஸ் அதைத் தான் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Next Story