சென்னையில் இனி "புள்ளிங்கோ"வின் வால் ஒண்ட நறுக்கப்படும் - மாநகர பேருந்துகளில் செயல்படுத்தப்படும் அதிரடி திட்டம்!
சென்னையில் இனி "புள்ளிங்கோ"வின் வால் ஒண்ட நறுக்கப்படும் - மாநகர பேருந்துகளில் செயல்படுத்தப்படும் அதிரடி திட்டம்!

பட்டா கத்திகளை வைத்துக்கொண்டு ரௌடிசம் செய்வது, கத்தியை சாலையில் உரசியபடி செல்வது என்று நாளுக்கு நாள் சென்னையில், புள்ளிங்கோ என்றழைக்கப்படும் மனித பிராணிகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது.
இதனை கருத்தில் கொண்டு, சென்னையில் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் போது ஏற்படும் மோதலை தடுப்பதற்காகவும், பேருந்துகளில் குற்ற சம்பவங்கள், திருட்டு, ஈவ்டீசிங், ஏற்படாமல் தடுக்க முன் முயற்சியாக சி.சி.டி.சி. கேமிராக்களை காவல்துறையினர் பொருத்தி உள்ளனர்.
பூந்தமல்லி-பிராட்வேக்கு சைதாப்பேட்டை வழியாக செல்லும் 54எல் பேருந்தில் 3 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அடையாறு போலீஸ் துணை கமிஷனர் பகலவன், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோரின் முயற்சியால் 54எல் மாநகர பேருந்தில் 3 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
ஒரு கேமிரா வெளிப்புறமாகவும், 2 கேமிராக்கள் பேருந்தின் உள்புறமாகவும், ஓட்டுனர் இருக்கைக்கு இடது புறத்திலும், பின்புற முனை இடது பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் நம்மை யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்று குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு இந்த திட்டம் அடிவயிற்றில் புளியை கரைத்துள்ளது.