வடபழனி முருகன் கோவில் நிகழ்ச்சிகளை சீர்குலைக்க மிஷினரிகளின் பலே திட்டம் - அறநிலையத்துறை அதிகாரியே உடந்தையானது அம்பலம்!
வடபழனி முருகன் கோவில் நிகழ்ச்சிகளை சீர்குலைக்க மிஷினரிகளின் பலே திட்டம் - அறநிலையத்துறை அதிகாரியே உடந்தையானது அம்பலம்!

வடபழனி கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை குறைத்து காட்டி, திருப்பள்ளியெழுச்சி நடப்பதற்கு முட்டுக்கட்டை போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடபழனி முருகன் கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடப்பது வழக்கம். இந்த நிகழ்வை காண நாளுக்கு நாள் தினமும் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பள்ளியெழுச்சி நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் எணிக்கையை படி படியாக குறைத்து இறுதியில் வடபழனி முருகன் கோவிலில் நடக்கும் திருப்பள்ளியெழுச்சி நிகழ்வுக்கு மூடுவிழா நடத்த அந்த கோவிலின் அறநிலைதுறை அதிகாரி சித்ராதேவி மிசிநரிகளுடன் இணைத்து போட்ட பலே திட்டம் அம்பலமாகியுள்ளது.
இந்த கோவிலில் அறநிலையத்துறை அதிகாரியாக இருக்கும் சித்ரா தேவியின் கணவர் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் வடபழனி கோவில் அதிகாரி சித்ரா தேவி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பர் சீமான் மற்றும் கிருஸ்துவ மிஷினரி துணையுடன் வடபழனி கோவிலில் நடைபெறும் பள்ளி அறை நிகழ்ச்சியை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அறநிலையத்துறை அதிகாரி சித்ரா தேவி உத்தரவின் பேரில் பள்ளியறைக்கு வரும் பக்தர்களிடம் கட்டண வசூல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்து, கடந்த இரண்டு நாட்களாக வசூல் வேட்டை நடந்து வருகிறது. இந்த வசூல் வேட்டை தொடர்வதால் நாளுக்கு நாள் பள்ளியறைக்கு வரும் பக்தர்கள் வருகை குறைத்து வருகிறது; நாளடைவில் பக்தர்கள் வருகை குறைவை காரணம் காட்டி இந்த பள்ளியறை நிகழ்வை நிறுத்துவது தான் சித்ராதேவி கிருஸ்துவ மிசினர்களிடம் இணைந்து போட்ட திட்டம் என்கின்றனர் பக்தர்கள்.
மேலும் வடபழனி கோவிலில் நடக்கும் பள்ளியறை நிகழ்வை இழுத்து மூட நடக்கும் சதி திட்டங்கள் பற்றி கோவில் நிர்வாகத்தை சந்தித்த ஆன்மீக இந்து மக்கள் கட்சியின் தலைவர் JSK கோபி, அங்கே நடக்கும் கட்டண வசூல் பற்றி கேட்க, சித்ராதேவி தான் கட்டணம் வசூலிக்க சொன்னார்கள் என கோவில் ஊழியர்கள் பதில் கொடுத்துள்ளனர். மேலும் இந்த கட்டண வசூலை நிறுத்தவில்லை என்றால் இந்துகள் அனைவரையும் ஒன்றிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என JSK கோபி அறநிலையத்துறை அதிகாரி சித்ராதேவியை எச்சரித்துள்ளார்.