Kathir News
Begin typing your search above and press return to search.

உய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான்! சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை!

உய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான்! சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை!

உய்குர் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் பாகிஸ்தான்! சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கொடுமை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:29 PM GMT

ஜின்பிங் போடும் உத்தரவை எல்லாம் குட்டிக்கரணம் அடித்தாவது பாகிஸ்தான் நிறைவேற்றி வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று சொல்கிற ரேஞ்சுக்கு போயிருக்கிறது பாகிஸ்தானின் நன்றி விசுவாசம். 'என்னடா இவன் அடிமடியிலேயே கை வைக்கிறான்' என்று நம்மில் புத்தி உள்ளவர்களுக்குத் தோன்றும் வகையில் புதிதாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது சீனா. இஸ்லாமாபாத்தில் இருக்கும் சீன தூதரகம் உய்குர் முஸ்லிம்களை சீனா நடத்தும் விதத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் பாகிஸ்தானில் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

WION செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி சீன கம்யூனிஸ்ட் அரசு ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களை மோசமாக நடத்துவது குறித்து பாகிஸ்தான் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு ஆய்வறிக்கையை பாகிஸ்தான் அதிகாரிகள் சீன தூதரகத்திற்கு சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. மதரீதியான இதழ்கள் உய்குர் முஸ்லிம்களை சீனா கேவலமாக நடத்துவது குறித்து செய்திகள் வெளியிட்டதை அடுத்து பாகிஸ்தான் பொதுமக்கள் மத்தியில் உய்குர் முஸ்லிம்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது என்று அந்த அறிக்கையில் வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஷ்ரக், அல்-இ-ஹடித், அல் ஐடிஸம், உஸ்வா ஹசானா மற்றும் தர்ஜுமன் உல் குரான் ஆகிய இஸ்லாமிய மத இதழ்கள் இதைப் பற்றி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே கட்டுரைகள் வெளியிட்டு வருவதாகவும் இதை தொழில்நுட்ப ரீதியான அடிமைத்தனம் என்று விவரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே தீவிர மத நம்பிக்கை கொண்ட, சமரசம் செய்து கொள்ளாத பாகிஸ்தானிய மதப் பிரிவுகளை எண்ணி சீன தூதரக அதிகாரிகள் கவலை கொள்வதாகத் கூறப்படுகிறது. Dawn போன்ற ஆங்கில ஊடகங்கள் சீனாவின் அதிகரித்துவரும் ஆதிக்க போக்கைப் பற்றி விவாதிப்பதையும் சீனா விரும்பவில்லை. Hittin என்ற தீவிரவாத ஆன்லைன் இதழை பாகிஸ்தான் ஏற்கனவே தடை செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இதழ் சீனா பாகிஸ்தானுக்கு நல்லது செய்ய நினைக்கிறது என்று மக்கள் எண்ணக் கூடாது என்றும் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்து விமர்சித்தும் செய்தி வெளியிட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஊடகங்களே இந்த அளவுக்கு சீனாவை விமர்சித்து வருகின்றன என்றால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவின் செய்கைகளைப் பற்றி கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக இஸ்லாமிய மதத்தை நன்றாக புரிந்துகொள்ள தேவையான முயற்சிகளை எடுக்குமாறு சீன தூதரக அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். சக இஸ்லாமிய சகோதரர்களுக்காக குரல் கொடுக்காமல் மேம்போக்காக சீனாவிடம் அவர்களுக்காக பேசுவதைப் போல் காட்டிக்கொள்ள முயலும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு சீனா பாகிஸ்தானை தனது வசப்படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.

இங்கு நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தியாவில் முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று அவ்வப்போது தனது இருப்பைக் காட்டிக்கொள்ள கூச்சலிடும் பாகிஸ்தான் உய்குர் முஸ்லிம்களின் நல்வாழ்வு என்று வரும்போது மட்டும் அமைதியைக் கடைப்பிடிக்கிறது என்பது.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் பொருளாதார முக்கியத்துவம் பாகிஸ்தானை சீனாவின் காலில் விழாத குறையாக உய்குர் முஸ்லிம்கள் விஷயத்தில் செயல்பட வைத்திருக்கிறது. பாகிஸ்தானில் உய்குர் முஸ்லிம்களைப் பற்றிய பேச்சு அடிபடுவதை கட்டுப்படுத்த முயல்வது போலவே சீனா சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை பற்றி பேசப்படாமலிருக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. சீனா உய்குர் முஸ்லிம்களை நடத்தும் விதம் குறித்து முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சியை China Global Television Network (CGTN) என்ற தனது சர்வதேச செய்தி ஊடகம் மூலம் சீனா பரப்ப முயன்றது. மத மற்றும் இனரீதியான சிறுபான்மையினருக்கு சீனா இழைக்கும் கொடுமைகளை பற்றி தெரியாதவர்களுக்கு, உண்மை நிலை‌ என்னவென்றால் உய்குர் முஸ்லிம்களையும் பிற சிறுபான்மையினரையும் கொடுமைப்படுத்திக் கொன்று அவர்களது உறுப்புகளை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

பிரிவினைவாதத்தை ஓடுகிறோம் என்ற பெயரில் சீன கம்யூனிஸ்ட் அரசுகள் கடந்த 1990களில் இருந்தே உய்குர் முஸ்லிம்களை அடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. சீனா உய்குர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து மனிதத்தன்மையற்ற வகையில் நடத்துவது பற்றிய தகவல்களை மறுத்து அப்படிப்பட்ட முகாம்களே இல்லை என்று கூறி வந்த நிலையில் இதைப்பற்றிய உண்மைகள் அதிகம் கசியத் தொடங்கியதும் இந்த முகாம்கள் தொழிற்கல்வி கற்பிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று சீனா மாற்றி பேசத் தொடங்கியது.

லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம் பெண்கள் அடிக்கடி கர்ப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது, கருத்தடை சாதனங்கள் பொருத்தப்படுவது, அனுமதியின்றி கருக்கலைப்பு செய்யப்படுவது போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சீனா முழுவதும் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு குறைந்து விட்ட நிலையில் உய்குர் பெண்கள் மத்தியில் மட்டும் அதிகரித்து வருகிறது. மேலும் உய்குர் முஸ்லிம்கள் இடையே பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2014இல் மட்டும் உய்குர் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் சின்ஜியாங் மாகாணத்தில் 2 லட்சம் கருத்தடை சாதனங்கள் பொருத்தப் பட்டதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களில் இந்த எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 3,30,000 கருத்தடை சாதனங்கள் உய்குர் முஸ்லிம் பெண்களை கட்டாயப்படுத்தி பொருத்தப்பட்டுள்ளன.

இது ஒரு இனப்படுகொலை என்று சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடும் அளவு உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா வன்முறையையும் மனித உரிமை மீறலையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சீனாவின் கடந்த கால நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது இஸ்லாமை புரிந்து கொள்ளும் முயற்சியில் எல்லாம் கம்யூனிஸ்ட் அரசு இறங்கப் போவதில்லை. அதற்கு மாறாக அவ்வாறு செய்யும் என்று பாகிஸ்தான் நம்பினால் அவர்கள் சந்திக்கப்போகும் உண்மை நிலவரத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

இஸ்லாம் ஒரு மனவியாதி என்றுதான் சீனா நினைக்கிறது. சீனாவின் வார்த்தைகளை நம்பி சீனாவுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசும் முடிவை பாகிஸ்தான் எடுத்தால் ஜிங்ஜியாங் போல் இஸ்லாமாபாத்தைச் சுற்றி மேலும் பல பகுதிகள் உருவாக வாய்ப்பு அதிகம்.


நன்றி : tfipost.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News