கருப்பர்கள் உள்ளே வரக்கூடாது என நோட்டீஸ் ஒட்டிய சம்பவம், நிரந்தரமாக கிளையை முடிய சீனா மெக்டோனல்ஸ்.!
கருப்பர்கள் உள்ளே வரக்கூடாது என நோட்டீஸ் ஒட்டிய சம்பவம், நிரந்தரமாக கிளையை முடிய சீனா மெக்டோனல்ஸ்.!

கருப்பு மக்கள் உள்ளே வரக்கூடாது என பலகையில் எழுதிய சீனாவில் இருக்கும் மெக்டோனல்ஸ் ரெஸ்டாரன்ட்.
ஆப்பிரிக்கா மக்கள் சீனாவில் வந்து தங்குவது நாளுக்கு நாள் அதிகமாக வருகிறது. இதனால் ஆப்பிரிக்கா மக்களுக்கும் சீனா மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. சீனாவின் குவாங்சௌ நகரில் இந்த மோதல் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருப்பதால் வெளி நாட்டு மக்களை பார்த்தாலே சீனா மக்கள் சண்டை போடுகின்றனர். இதனிடையே குவாங்சௌ நகரில் இருக்கும் மெக்டோனல்ஸ் கிளையில் கருப்பு மக்கள் உள்ளே வரக்கூடாது என்று நோட்டீஸ் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் மீது பலபேர் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக மெக்டோனல்ஸ் தக்க விளக்கம் கொடுக்க வேண்டும் என கேட்டனர்.
இதன் பின்னர் நிறுவனம் அந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறோம். மேலும் அந்த கிளையை நிரந்தரமாக மூடுவோம் என அறிவித்தது.