Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிடம் மோதி பெரும் தவறு செய்த சீனா - பொருளாதார ரீதியில் பலத்த அடிவாங்கும் சீன நிறுவனங்கள்.!

சீனாவிற்கு எதிரான மோடி அரசாங்கத்தின் பொருளாதாரப் போரும் குறைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை.

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 July 2020 11:44 AM GMT

லடாக்கில், சீனா நம்மிடம் வம்பிழுத்து பிரச்சினை செய்ததற்கு நன்றாக தண்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் பல முடிவுகள் இந்தியாவால் எடுக்கப்பட்டுள்ளன, அவை அனைத்தும் சீனப் பொருளாதாரத்தை தொடர்ந்து குறிவைக்கின்றன.

மே 5 ஆம் தேதி லடாக் இராணுவ மோதல் பதற்றம் தொடங்குவதற்கு முன்பே, மோடி அரசாங்கம் சீனாவுக்கு எதிராக சில உறுதியான முடிவுகளை எடுக்கத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில், மோடி அரசு அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மாற்றியது, இனிமேல் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா உட்பட பல நாடுகளிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீடு அரசாங்க பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த மாற்றம் கொள்ளையடிக்கும் சீன முதலீடுகளை சரிபார்க்கும் நோக்கம் கொண்டது.

சில நாட்களுக்குப் பிறகு, சீன வெளிநாட்டு சேவை முதலீடுகளுக்கும் (FPI) இந்தியா கட்டுப்பாடுகள் விதிப்பதாக செய்திகள் வந்தன.

லடாக் மோதல் பதற்றம் ஏற்பட்டதும், இரு நாடுகளுக்கிடையில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்தது. சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் பரவத் தொடங்கியது. வர்த்தகர் சங்கத்தின் உச்ச அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT), டிசம்பர் 2021 க்குள் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு (சுமார் 13 பில்லியன் டாலர்கள்) மேல் மதிப்புள்ள சீனப் பொருட்களை புறக்கணிக்கும் திட்டங்களை அறிவித்தது.

சீன தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது, மேலும் இந்தியாவை விட 48.66 அமெரிக்க பில்லியன் டாலர் அதிக வர்த்தகத்தை சீனா கொண்டுள்ளது. இந்தியா, சீனத் தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது, சீன-இந்தியா வர்த்தகத்தில் ஏற்பட்ட பெரும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து விடும் என்ற அச்சம் சீனாவுக்கு ஏற்பட்டது.

இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளைக் கொண்ட மற்ற நாடுகளின் வழியாக இந்தியாவுக்குள் தனது பொருட்களை அனுப்ப நினைக்கும் சீனாவின் முயற்சிகளையும் இந்தியா கவனித்து வருகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்கில், இந்தியா 'எந்த நாட்டில் பொருள் தயாரிக்கப்பட்டது' என்று கட்டாயமாக குறிப்பிடும் விதியையும் பயன்படுத்தியுள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவை தங்கள் தளங்களில் விற்கப்படும் தயாரிப்புகள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதைக் காட்ட ஒப்புக் கொண்டுள்ளனர். சீன இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைக்க மோடி அரசு தயாராகி வருவதால், இந்திய நுகர்வோர் தாங்கள் வாங்க விரும்பும் தயாரிப்புகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன என்று தெரிந்து கொண்டு வாங்க இந்த முறை உதவியாக இருக்கும்.

கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னர் மோடி அரசாங்கத்தின் சீனா மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. டிக்டோக் மற்றும் பிற பிரபலமான சீன பயன்பாடுகளை தடை செய்ய இந்தியா முடிவு செய்தது. இந்த முடிவு இந்தியாவின் வளர்ந்து வரும் மொபைல் பயன்பாடுகளில் இருந்து டஜன் கணக்கான பிரபலமான சீன பயன்பாடுகளை வெளியேற்றியது. இந்தியா விதித்த கடுமையான தடைக்கு பின்னர் டிக்டோக் மட்டுமே 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்க நேரிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமல்ல, ஒரு தந்திர சூழ்ச்சியும் கூட. சீன பயன்பாடுகளை பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக அடையாளம் காண்பதன் மூலம், சீனாவுக்கு எதிராக சர்வதேச விமர்சனங்களை ஆரம்பித்து வைத்தது இந்தியா. இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் டிக்டோக் மற்றும் பிற சீன பயன்பாடுகளை தடை செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். மைனர் சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்ததற்காக தென் கொரியாவும் டிக்டோக்கிற்கு 1,55,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.

இப்போது, ​​தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மீண்டும் நடவடிக்கைக்கு எடுத்துள்ளது. முன்னதாக தடைசெய்யப்பட்ட 59 சீன பயன்பாடுகளின் 47 குளோன்களை வெள்ளிக்கிழமையன்று தடை செய்தது.

லடாக்கில் நிலவும் மோதல் பதற்றம் முழுமையாக இன்னும் முடிவடையவில்லை எனவே சீனாவிற்கு எதிரான மோடி அரசாங்கத்தின் பொருளாதாரப் போரும் குறைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை.

இந்தியாவில் சீன முதலீடுகளை நிறுத்தி வைப்பதற்காக , சீனா முன்னிலை வகிக்கும் ஏலங்களை மட்டுமே ரத்து செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வியாழக்கிழமை, இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்,தொழில்துறை துறையில் தங்களை பதிவு செய்யாவிட்டால், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அரசாங்க ஒப்பந்தங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, "இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த" இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க உத்தரவு வருங்கால டெண்டர்களுக்கும், கிடைக்கப்பெற்ற ஆனால் இதுவரை வழங்கப்படாத டெண்டர்களுக்கும் பொருந்தும். நிச்சயமாக, இந்த நடவடிக்கை சீனாவுக்கு எதிரான இராணுவ பதட்டங்களின் பின்னணியில் வந்துள்ளது.

இதற்கிடையில், மேலும் 275 சீன பயன்பாடுகளும் மோடி அரசாங்கத்தின் ரேடாரில் உள்ளன. அவை தேசிய பாதுகாப்பு மற்றும் உபயோகிப்பவர்களின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்று ஆராயப்படும். டென்செண்டின் பப்ஜி மற்றும் அலிபாபாவின் அலிஎக்ஸ்பிரஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட இந்தியாவின் கண்காணிப்பில் உள்ளன.

சீனா வேண்டுமென்றே கிழக்கு லடாக்கில் போர் போன்ற சூழ்நிலைகளை உருவாக்கியது. எனவே தேசிய பாதுகாப்புக்காக இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உண்மையில், தொலைதொடர்பு நிறுவனமான ஹவாய், ஈ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா, மற்றும் டென்சென்ட் உள்ளிட்ட குறைந்தது ஏழு சீன நிறுவனங்கள் சீன இராணுவத்துடன் நேரடி / மறைமுக தொடர்புகள் இருப்பதாக அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சீனாவிற்கு எதிரான மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. . இந்த செயல்பாட்டில், இந்தியாவும் சீன தயாரிப்புகளை சார்ந்து இருப்பதில் இருந்து தப்பிக்கப் போகிறது என்பது போனஸ்.

Translated From:TFI

Next Story