சீனாவில் கொரோனா குறித்த உண்மையை வெளியே சொல்ல முயற்சிப்பவர்கள் காணாமல் போகும் கொடூரம் - ஒரு உயிர் பறிபோனது!
சீனாவில் கொரோனா குறித்த உண்மையை வெளியே சொல்ல முயற்சிப்பவர்கள் காணாமல் போகும் கொடூரம் - ஒரு உயிர் பறிபோனது!
சீனாவில் இருந்து வரும் தகவல்கள் அனைத்தும் அந்த அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தோன்றிய வுஹானின் உண்மை நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது.வுஹானில் உண்மையில் என்ன நடக்கிறது என வெளி உலகுக்கு தகவல் கூறி வந்த சீன வழக்கறிஞர் சென் கிஷி கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. அதே போல, உண்மை நிலவரத்தை வெளியிட்டு வந்த முன்னாள் பல்கலைக்கழக ஆசிரியர் சூ சியாங், பெரு வியாபாரி ரென் சிகியாங் ஆகியோரையும் காணவில்லை.
மொத்தமாக காணாமல் போன ஐந்து நபர்களின் பட்டியலில் மூன்று குடிமக்கள் பத்திரிகையாளர்கள் உள்ளனர் - சென் கியுஷி, ஃபாங் பின் மற்றும் லி ஜெஹுவா ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்ட நகரத்திற்குள் இருந்து படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மெட்ரோ அறிக்கையின்படி, யூடியூபில் இந்த நபர்களின் பிரபலமான கணக்குகள், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் விபிஎன் மூலம் அணுகப்படலாம்.
வைரஸ் பற்றிய தகவல்களைப் பகிர்ந்ததற்காக சீனாவில் முதல் வாரத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக டெய்லி மெயில் அறிக்கை கூறியது. மேலும், மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் 'நோய்வாய்ப்பட்டவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டனர். மேலும், கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக தண்டனையும் விதிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து கொரோனா வைரஸ் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைநகர் பீஜிங்கில் தான் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறி பீஜிங்கை விட்டு செல்லாமல் பார்த்துக் கொள்கிறது சீன அரசு.
கொரோனா வைரஸ் பற்றி முதலில் உலகிற்கு சொன்ன மருத்துவர் Dr Li Wenliang இறந்துவிட்ட நிலையில், அவரைப் போலவே சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை வீடியோ வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டு வந்த Ren Zhiqiang, Chen Qiushi, Fang Bin, Li Zehua, Xu Zhangrun ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
முன்னதாக, கொரோனா வைரஸ், சீனாவில் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பயிற்சியாளரால் தற்செயலாக கசிந்திருக்கலாம் என்று தகவல்கள் கூறப்பட்டன.
நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியும் பிரெஞ்சு வைராலஜிஸ்ட்டுமான லூக் மாண்டாக்னியர், SARS-CoV-2 வைரஸ் ஒரு ஆய்வகத்திலிருந்து வந்தது என்றும், இது எய்ட்ஸ் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியின் விளைவாகும் என்றும் கூறினார்.
மேலும், ரேடியோ ஃப்ரீ ஆசியா அறிக்கையின்படி, வுஹான் மக்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை நிராகரிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் எண்ணிக்கை குறைந்தது 40,000 இருக்கும் என்று கூறியுள்ளனர்.