Top
undefined
Begin typing your search above and press return to search.

சீன எதிர்ப்பால் கோவைக்கு வரும் ஆர்டர்கள் - தயாரிப்புத் துறையில் உள்ள தொழில் முனைவோர் மகிழ்ச்சி.!

சீன எதிர்ப்பால் கோவைக்கு வரும் ஆர்டர்கள் - தயாரிப்புத் துறையில் உள்ள தொழில் முனைவோர் மகிழ்ச்சி.!

ஏந்திழைBy : ஏந்திழை

  |  19 Sep 2020 1:48 AM GMT

கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சீன தயாரிப்பு பொருட்கள் புறக்கணிப்பு மற்றும் மத்திய அரசு இறக்குமதிக்கு விதித்த கட்டுப்பாடுகளால் சீன பொருட்களை இறக்குமதி செய்துவந்த பலரும் தங்களிடம் ஆர்டர் கொடுக்க விசாரித்து வருவதாக கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சீன தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்து வந்த வர்த்தகர்கள் தற்போது உள்ளூர் தொழில் நிறுவனங்களால் அந்த பொருட்களை தயாரித்து தர முடியுமா என்று விசாரித்து வருவதாகவும் ஆர்டர் வழங்கும் எண்ணத்திலும் இருப்பதாகவும் கோவை நகர தொழில் முனைவோர் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அதனால் பல தொழில்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பிலிருந்து தொழில் நிறுவனங்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது ஆட்டோமொபைல் மற்றும் அரசுத்துறை ஆர்டர்கள் அதிகரித்து வருவதாகவும் கோவை நகர தொழில்முனைவோர் கூறியுள்ளனர். ஊரடங்கால் ஆர்டர்கள் இல்லாமலும் நிதி பற்றாக்குறையை சந்தித்தும் வந்த தொழில்நிறுவனங்களின் பொருளாதார நிலை தற்போது மெதுவாக மீட்சி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ரயில்வே துறைக்கு பொருட்கள் தயாரித்து வழங்கும் ரயில்வே சப்ளையர்கள் கூட்டமைப்பு தலைவர் சுருளிவேல், "இதுவரை சீனாவில் தயாரித்து வாங்கப்பட்ட பாகங்களை நாங்கள் தயாரித்து வழங்க முடியுமா என்று வர்த்தகர்கள் கேட்கின்றனர்" என்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்பவர்கள் கூட தங்களிடம் பொருட்களை தயாரித்து தருமாறு கேட்பதாகவும் கூறியுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் வழக்கமாக கிடைப்பதில் 35% ஆர்டர்களே ஆட்டோமொபைல் துறையில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கிடைத்து வந்ததாக கூறப்படும் நிலையில் இந்த மாதத்தில் இருந்து ஆர்டர்கள் 10% வரை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் அரசு துறைகளில் இதுவரை வழங்கப்பட்டு வந்த ஆர்டர்களும் மீண்டும் தற்போது வழங்கப்படுவதாகவும் ஆனால் கிரைண்டர் மற்றும் பம்ப் தயாரிப்பு துறைகளுக்கு மட்டும் குறைந்த அளவிலேயே ஆர்டர்கள் வருகின்றன என்று கூறப்படுகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்த வர்த்தகர்களும் அத்தகைய பொருட்களை கோவையில் தயாரித்து தர முடியுமா என்று விசாரித்து வருவதாகவும் எனினும் விசாரிப்பதோடு நில்லாமல் ஆர்டர்கள் தருவதற்காக தொழில் முனைவோர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Source : TOI

Next Story