Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய சுகாதார திட்டம்..!

இந்திய சுகாதார திட்டம்..!

இந்திய சுகாதார திட்டம்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Feb 2019 9:57 AM GMT


ஒரு மருத்துவமனைக்குள் நுழையும் போது பல்வேறு விதமான முரண்பட்ட காட்சிகளை காண முடிகிறது. ஒரு பக்கம் குழந்தை பிறப்பு, புற்றுநோயில் இருந்து மீண்டு வருதல், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருந்தால் என்று சிலரின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக தெரிகிறது.


அதே நேரத்தில் மறுபுறம் நோயால் அவதியுற்று இறத்தல், உயிர்கொல்லி நோயில் சிக்கி தவித்தல் என்று சிலரின் வாழ்க்கை சோகமாகவும் தெரிகிறது.


மக்கள் அனைவருமே நோயின்றி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். கொடிய நோய்கள் அண்டக்கூடாது என்ற எண்ணம் அனைவரிடத்திலுமே காணப்படும். அதற்கு தேவை சிறந்த மருத்துவம், எளிதில் அணுகக்கூடிய மருத்துவ சேவை, அனைத்து தரப்பு மக்களுக்குமான செலவில் உயர்தர சிகிச்சை போன்றவை அவசியமாகிறது.


இதன் மூலம் உயிர் அச்சுறுத்தலை ஏற்ப்படுத்தும் நோய்களை மக்கள் எவ்வித சிரமமும் இன்றி எதிர்கொண்டு நலமான வாழ்க்கை வாழ முடியும்.


ஒரு நாட்டின் நிலையை நாட்டின் சுகாதாரதுறை மேற்கொள்ளும் நடவடிக்கையை வைத்தே அறிந்து கொள்ள முடியும். மக்கள் ஆரோக்கியம் இன்றி இருப்பது நேரடியாக நாட்டின் பொருளாதரத்தை பாதிக்கும். மக்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான், ஒரு நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்த இலக்குகளை எட்ட முடியும். அதற்கு சிறந்த முறையிலான சுகாதார திட்டங்கள் அவசியமாகிறது.


இதற்கு முன்னர் இந்தியாவில் பல்வேறு சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் அவை பெயரளவில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டன. சில திட்டங்கள் எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது கூட தெரியாமல் கிடப்பில் போடப்பட்டன.


ஆனால் 2014 பொதுத்தேர்தலுக்கு பிறகு நிலை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. முன்னர் இருந்த குறைபாடுகள் எல்லாம் களையப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்து பின்பற்றக்கூடிய அளவிற்கு சிறந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.


பிரதமர்
மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை கிடைக்க
வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது,
செயல்படுத்தியும் காட்டியுள்ளது.



உடல்
நலத்திற்கு யோகா:


பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அமைதியான வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான உடல் நலத்திற்கும் வித்திடும் யோகாவை பிரதமரே பின்பற்றி, மக்களும் பின்பற்ற முன்னுதாரணமாக விளங்கினார்.





உலக
சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவொன்றில், 2016ஆம் ஆண்டில்
மட்டும் ஐந்து வயதுக்குட்பட்ட, சுமார் ஒரு லட்சம் குழந்தைகள்
வீட்டுச்சூழல் மற்றும் வெளிப்புறச் சூழலில் ஏற்படும் மாசுபாட்டினால் பலியானதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.



உயிரைக்காத்த
உஜ்வாலா திட்டம்:


இந்தியாவிலுள்ள 98 சதவிகிதக் குழந்தைகள் பாதுகாப்பற்ற அளவிலான, மாசு பெருகிய வீட்டுச்சூழலில் வளர்கின்றன. இதனால் மரணம் அல்லது மரணத்தையொட்டிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய்கள் உண்டாகுமென்று எச்சரிக்கை செய்துள்ளது ஐக்கிய நாடுகள் உலக சுகாதார நிறுவனம்.


சமீபத்தில் இந்நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில், மாசுபாட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுவதன் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது.


சமையல் எரிவாயு மற்றும் தீப்பற்ற வைப்பதற்கான பொருட்களின் மூலமாக வீட்டுச்சூழலில் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும், இதனால் பெருமளவிலான குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், சிலர் மரணமடைவதாகவும் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.


இந்த ஆய்வுக்கான தரவுகள் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு வரை இது தொடரப்பட்டது. இந்தியாவில் எரிபொருளுக்கான முக்கிய ஆதாரமாக உயிரி எரிவாயு இருந்ததற்கும், குழந்தைகள் இறப்பு விகிதத்துக்குமான நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது இந்த ஆய்வு முடிவு.


எது எப்படியாயினும், 2016ஆம் ஆண்டில் இருந்து, வீட்டுச்சூழலில் காற்று மாசுபாடானது இந்தியாவில் பெருமளவில் குறைந்திருப்பதாகக் கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம். பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலுள்ள பெரும்பாலான வீடுகளில் எல்பிஜி மற்றும் இதரத் தூய்மையான வழிகள் மூலமாகச் சமையல் செய்வது 56 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது.


இன்று, இந்த எண்ணிக்கை 80 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இதற்கு, உஜ்வாலா திட்டம் போன்ற மக்களுக்குப் பயன் அளிக்கும் மத்திய அரசுத் திட்டங்களுக்குத் தான் நன்றி கூற வேண்டும்.



மக்களின்
இயலாமையை போக்கிய ஜன் ஒளஷதி கேந்திரா:


நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும், மருந்துகள் வாங்க முடியாமல் ஏழைகள் நோய் பாதிப்பில் உயிரிழப்பை சந்திக்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின் பேரில், மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு, இயங்கி வருகின்றன.


பிரதம மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்திரா என்ற திட்டத்தில், மத்திய அரசின் மருந்துகள் துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த மருந்தகங்களில், மிகக் குறைந்த விலைக்கு தரமான மருந்துகள் வழங்கப்படுவது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த மருந்தகங்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோயாளிக்கான மருந்துகள், செரிமான பாதிப்பு, கொழுப்பு தடுப்பு மருந்துகள், சத்து மாத்திரைகள், இருமல், கண், தோல் உள்ளிட்ட முக்கிய உடல் நிலை பாதிப்புக்கான உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை பிற மருந்தகங்களில் வாங்கும் விலையைவிட 70% குறைந்த விலைக்கு, மக்கள் மருந்தகங்களில் கிடைத்து வருகிறது.


சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மாதந்தோறும் மாத்திரை, மருந்துகளை செலவிடும் ஏராளமானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.


பிற மருந்தகங்களில் சர்க்கரை நோய்க்கு மாதம் ரூ.800-க்கு வாங்குவது, இங்கு ரூ.200-க்கு மலிவு விலையில் கிடைப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பிற மருந்துகளும் மிகக் குறைவான விலைக்கு கிடைக்கிறது.


ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் வரலாற்று சாதனை புரிந்துள்ளது.



குழந்தைகளின்
உயிரை பேணிய இந்திரா தனுஷ் தடுப்பூசித்திட்டம்:


ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை தர வேண்டியது அவசியம். குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு முன்னதாகவே 5 தடுப்பு மருந்துகளைக் குழந்தைக்கு தரவேண்டும் (Vaccination for 0-5 years babies) என்பது அவசியம். இதைத் தவறவிட கூடாது.





தேசிய அளவில் ஆயிரம் குழந்தைகளில் 25 குழந்தைகள் பல்வேறு நோய் தொற்று காரணங்களால் உயிரிழக்கின்றன. குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி மற்றும் மருந்துகள் அளிப்பதன் மூலம் இந்த விகிதாராசரத்தை தேசிய அளவில் 12 குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதில் ஏற்கெனவே தீவிர தடுப்பூசித் திட்டங்களால் அம்மை மற்றும் போலியோ நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. தற்போது நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தேசிய அளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.7 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் போலியோ, டிப்தீரியா, வாந்தி, டெட்டனஸ், காசநோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, மஞ்சள் காமாலை, ரோட்டோ வைரஸ், டயரியா, நிமோனியா போன்றவை தடுக்க முடியும்.


2014-ஆம் ஆண்டில் மத்திய அரசின் "இந்திரா தனுஷ்' திட்டம் தொடங்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடுவதில் நிர்ணயித்த இலக்கில் 90 சதவீதத்தை அடைவதற்காக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இத்திட்டத்தின் மூலம் வழக்கமான நோய்த்தடுப்பூசி திட்டங்களின் கீழ் உள்ளடங்காமல் போன கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரண்டு வயதிற்கு கீழுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நோய்த்தடுப்புத் திறனூட்டல் (immunisation) மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக 5 வயதுக்கு கீழ் உள்ளா 3,38,00,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு பல்வேறு நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்பட்டுள்ளது.



உலகை உற்றுநோக்கச்செய்த ஆயுஸ்மான் பாரத் திட்டம்:


பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அடுத்தகட்ட வரலாற்று சாதனை என்று இத்திட்டத்தை கூறவேண்டும். உலக அளவில் சாதனை படைத்த திட்டமாக ஆயுஸ்மான் பாரத் இடம்பெற்றுள்ளது. ஆயுஷ்மான் பாரத் சாதாரண, சாமானிய மக்களுக்கும் சுகாதாரத் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய அரசு முன்னெடுத்து வைக்கிறது.


இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தொடங்கி வைத்தார். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரத் திட்டங்களில் உரிய பலன் கிடைக்கும் வகையில், பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத் திட்டம்) செயல்படுத்தப்பட்டுள்ளது.





இந்த ஆரோக்கிய நலத் திட்டத்தின் மூலம், சுகாதார நலத்திட்டத்தை மக்கள் விருப்பத்திற்கேற்ப, மத்திய அரசு, புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும்.


10.74 கோடி குடும்பங்களுக்கு மேல் (ஏறத்தாழ 50 கோடி பயனாளிகள்) இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற தகுதியுள்ளவர்கள். உடனடியாக ரொக்கமாக பணம் செலுத்தாமலேயே, ஆவணங்கள் எதுவுமின்றி பயனாளிக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.


மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, அதிகபட்ச மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது. நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல், தகுதி படைத்த குடும்பங்களுக்கு தரமான மருத்துவ சேவையை இந்தத் திட்டம் வழங்குகிறது.


தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் 71-வது சுற்று கணக்கெடுப்பின்படி, 85.9 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கும், 82 சதவீத நகர்ப்புற குடும்பங்களுக்கும் சுகாதாரக் காப்பீடு இல்லாதது தெரியவந்துள்ளது.


பெரும் மருத்துவச் செலவு மக்களை கடனாளியாக்கி விடுகிறது. கடன் வாங்கி 24 சதவீத கிராமப்புற மக்களும், 18 சதவீத நகர்ப்புற மக்களும் மருத்துவச் சேவை பெறுவதாக இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் இத்தனை சிக்கல்களை எதிர்கொள்ள கூடாது என்ற நோக்கிலேயே இச்சாதனை திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.



டிஜிட்டலிலும் சுகாதாரச்சேவை:


மேற்கண்ட திட்டங்களோடு சேர்த்து,
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக Swasth Bharat மற்றும் Mera Aspataal செயலி வெளியிடப்பட்டது.


Swasth Bharat செயலியின் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான வழிமுறைகள்,
அனைத்து விதமான நோய்கள் குறித்த விவரம், அதனை தடுக்கும் வழிமுறை, நோயின் அறிகுறி,
முதலுதவி செய்தல் போன்றவற்றை பற்றி சாதாரண மக்களும் அறிந்துகொள்ள முடியும்.


Mera Aspataal செயலியின் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம்
இருந்து கருத்து பெறப்படும். ஆலோசனைகள் பதிவு செய்யப்படும். அனைத்து பொதுத்துறை
மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பதிவு
செய்யப்படும். இதன் மூலம் கிடைக்கும் தரவுகள் ஆராயப்பட்டு மக்களுக்கான மருத்துவ
சேவையின் தரம் மேலும் மேம்படுத்தப்படும்.



இந்தியாவின் தரத்திற்கு இதுவே சான்று:


எபோலா மற்றும் ஜிகா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்த நேரத்தில் கடினமான சூழ்நிலையை இந்தியா எப்படி எதிர்கொண்டது என்பதை மக்கள் இந்த நேரத்தில் மறக்க கூடாது.


உலகில் பல நாடுகளும் அந்த நோயை எதிர்கொள்ள முடியாமல் திணறின. பல நாடுகளின் ஜி.டி.பி குறையும் அளவிற்கு தாக்கம் இருந்தது. ஆனால் இந்தியாவில் மேம்பட்ட மருத்துவ சேவையினால், அரசும், தன்னார்வலர்களும் இணைந்து ஆற்றிய பணியினால் அப்படிப்பட்ட இக்கட்டான நிலையையும் சாதுர்யமாக எதிர்கொள்ள முடிந்தது.


உலகத்தரத்திலான மருத்துவ சேவை ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது.


சுகாதார துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்களை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் அளவிற்கு சாதனை படைத்துள்ளது என்பதே உண்மை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News