Kathir News
Begin typing your search above and press return to search.

'பட்டத்து இளவரசரை' "பால்டாயில் தம்பி" ஆக்கிய அ.தி.மு.க மருது அழகுராஜ்!

'பட்டத்து இளவரசரை' "பால்டாயில் தம்பி" ஆக்கிய அ.தி.மு.க மருது அழகுராஜ்!

பட்டத்து இளவரசரை பால்டாயில் தம்பி ஆக்கிய அ.தி.மு.க மருது அழகுராஜ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 6:50 AM GMT

வாரம் ஒரு முறையாவது எந்த அரசியல் பிரபலத்திடமாவது வாங்கி கட்டிக்கொள்வது உதயநிதியின் வேலை, மூத்த தலைவர்கள் கம்மென்று இருக்க தி.மு.க-வே உதயநிதியின் விளையாட்டு பொம்மை போல் நினைத்து அவசரப்பட்டு கருத்துக்களை உதிர்த்துவிட்டு, பின் யாரிடமாவது வாங்கி கட்டிக்கொள்வது உதயநிதியின் வாடிக்கையாகிவிட்டது.

இது எப்போதாவது நடக்கும் செயல் என்றாலும் பரவாயில்லை, நான்கு நாள்களுக்கு ஒரு முறை வழக்கமாகிவிட்டது. இளவரசரை இன்றைக்கு யார் அசிங்கப்படுத்தியிருக்கார்'ன்னு பார்ப்போம் என்று உடன்பிறப்புகளே ஆவல் படும் அளவிற்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் சமீபத்தில் முதல்வரின் சாத்தான்குளம் தொடர்பான விஷயத்தில் உதயநிதி, "நேரில் சென்று ஆறுதல் கூறுங்கள் எனவும். முடிந்தால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சூடு பட்டவர்கள் வீடும் பக்கம்தான் அங்கும் செல்லுங்கள்" என தெனாவட்டாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் பலர் அவருக்கு புத்திமதி சொல்லி வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் அவர்களோ வித்தியாசமான முறையில் உதயநிதியை தோலுரித்து காட்டினார்.

அதில், "அநீதி புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். இழப்புக்குள்ளானவர்களுக்கு கழக அரசு உரிய உதவிகள் செய்யும். இதில் கழகமோ கழக அரசோ செய்த குற்றம் ஏதுமில்லை

அதுசரி, உங்க குடும்பத்துக்காகவே பலிபீடம் ஏற்றப்பட்ட தா.கி, அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக், பால்மலர், பத்திரிக்கை ஊழியர்கள் இப்படி நீளும் பட்டியலில் உள்ள பரிதாபத்திற்குரியோரின் வீடுகளுக்கு சென்று விழிநீரை துடைத்தீர்களா..? பண முடிப்பு கொடுத்தீர்களா..?

பால்டாயில் தம்பி @Udhaystalin பட்டுனு பதிலை சொல்லு" என்று அசால்ட்டாக வினா எழுப்பினார்.

உடன்பிறப்புகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். "எங்கே இறந்தவர்களே வைத்து நாம் அரசியல் நினைத்தால், ஏற்கனவே திமுக'வின் அராஜகத்தால் இறந்தவர்களை வைத்து அரசியல் நம் பக்கமே திரும்புகிறதே" என அதிர்ச்சிக்குள்ளாயினர்.

வழக்கம்போல் உதயநிதியோ யாரையோ திட்றாங்க போல என்று இதுவரை கண்டும் காணாமல் உள்ளார். இதை நினைத்து உடன்பிறப்புகளோ "தமிழகத்தையே அராஜகத்தால ஆட்டி படைச்சோம் இப்ப தமிழகமே நம்மை வைத்து பொழுது போக்கு ஆடுகிறதே"என குமுறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News