Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய வீரர்கள் கொடுத்த அடியில் எத்தனை வீரர்கள் சாவு : முதன் முதலாக வாயை மெல்லத் திறந்தது சீனா !

இந்திய வீரர்கள் கொடுத்த அடியில் எத்தனை வீரர்கள் சாவு : முதன் முதலாக வாயை மெல்லத் திறந்தது சீனா !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 3:22 AM GMT

சமீபத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டை சீன ராணுவம் மீறியதை அடுத்து நடைபெற்ற மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சீனர்கள் தரப்பில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 10 நாட்கள் ஆகியும் சீனா இதுவரை தங்கள் தரப்பில் பலியானவர்கள் விவரம் குறித்தோ அல்லது காயம் அடைந்தவர்கள் குறித்தோ தங்கள் நாட்டு மக்களுக்கும் கூட விவரம் தெரிவிக்காமல் மறைத்து வருகிறது. இதனால் களத்தில் இருந்து வந்த புதிய தகவல்கள் படி சொல்ல முடியாத அளவுக்கு அதிகப்படியான வீரர்கள் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்ற சனிக்கிழமையன்று இந்திய இராணுவத்தின் அதிகாரிகளுக்கும் சீன இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, சீனத் சீனதரப்பில் ஒரு கமாண்டிங் அதிகாரி ஒருவர் சண்டையில் இறந்துவிட்டார் என்பது பேச்சுவார்த்தையின் போது உறுதிப்படுத்தப்பட்டதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சீனர்கள் முதன் முதலாக இப்போதுதான் வாய் திறந்துள்ளதாகவும், ஆனால் இன்னமும் முழு விவரத்தை அவர்கள் வெளியிட வில்லை என்றும் ஆனால் அவர்கள் தரப்பில் கமாண்டிங் அதிகாரி மரணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

https://swarajyamag.com/news-brief/chinese-commanding-officer-was-killed-in-galwan-valley-clashes-with-indian-army-china-admits-during-talks

Next Story