Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் பேரதிர்ச்சி! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளரின் அஜாக்கிரதையால் பல நூறு பேருக்கு கொரோனா பரவும் அபாயம்!

கோவையில் பேரதிர்ச்சி! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளரின் அஜாக்கிரதையால் பல நூறு பேருக்கு கொரோனா பரவும் அபாயம்!

கோவையில் பேரதிர்ச்சி! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளரின் அஜாக்கிரதையால் பல நூறு பேருக்கு கொரோனா பரவும் அபாயம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2020 4:52 AM GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் உள்பட 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, வேலாண்டிபாளையத்தை சோ்ந்த 77 வயது முதியவா் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு அண்மையில் உயிரிழந்தாா். இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா். இவா் உயிரிழப்பதற்கு முன் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவருடன் தொடா்புடைய 100க்கும் அதிகமானவா்களிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.இதில் கோவை, காட்டூரில் வசித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளரும், வால்பாறை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான ஆறுமுகத்துக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.இவரும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளதால் இவருடன் தொடா்புடையவா்களின் விவரங்களை சுகாதாரத் துறையினா் சேகரித்து வருகின்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் ஆறுமுகத்துக்கு கரோனா பரிசோதனை செய்த பின் வீட்டிலே தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். ஆனால், அவா் நகரில் நடந்த பல்வேறு போராட்டாங்கள், கூட்டங்களில் பங்கேற்றுள்ளாா்.

இது தவிர கட்சி அலுவலகம், அரசு அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இவா் மூலம் பலருக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை மீறி செயல்பட்டதற்காக அவருக்கு நோட்டீஸ் அளிக்கவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News