Kathir News
Begin typing your search above and press return to search.

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி துணை கலெக்டர் ஆனார்!

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி துணை கலெக்டர் ஆனார்!

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி துணை கலெக்டர் ஆனார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jun 2020 8:32 AM GMT

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சென்ற 15 ந்தேதி சீன வீரர்களுடன் ஏற்பட்ட எல்லை தகராறில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் ஒருவர் கர்னல் சந்தோஷ் பாபு. கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி களத்தில் எதிரிகளை துவம்சம் செய்தவர். இவரது கடைசி நேர சமயோசித அறிவால் ஏராளமான நம் வீரர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்து நாற்பதுக்கும் மேலான சீன வீரர்களை வீழ்த்த காரணமாக இருந்தார். ஆனால் இவரின் திட்டம் வெற்றி பெற்று சீனப்படைகள் பின் வாங்கி ஓடிப்போனபோது இவர் உயிருடன் இல்லை. சீனர்களின் கல்வீச்சில் படுகாயம் அடைந்து ஆற்றில் விழுந்து பலியானார்.

ராணுவ அதிகாரியான இவரின் வீரமரணத்தை அடுத்து இவருடைய குடும்பத்துக்கு தெலங்கானா அரசு ரூ. 5 கோடி நிவாரணத்தொகை வழங்கியது. அது மட்டுமல்லாமல் ஹைதரபாத் நகரில் வீட்டு மனை ஒன்றையும் அரசு வழங்கியது. மேலும் படித்த பட்டதாரியான இவரது மனைவி சந்தோஷிக்கு அதிகாரி நிலையில் அரசுப்பணி வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அவரை துணை கலெக்டராக நியமனம் செய்து தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர வீரமரணமடைந்த மற்ற 19வீரர்களின் குடும்பங்களுக்கும் சுமார் 10லட்சம் ருபாய் உதவித்தொகையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story