Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் ஜூலை மாத மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு செல்லுமா? அவசர அவசரமாக இரயில்வே மேற்கொள்ளும் நடவடிக்கை!

இந்தியாவில் ஜூலை மாத மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு செல்லுமா? அவசர அவசரமாக இரயில்வே மேற்கொள்ளும் நடவடிக்கை!

இந்தியாவில் ஜூலை மாத மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு செல்லுமா? அவசர அவசரமாக இரயில்வே மேற்கொள்ளும் நடவடிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Jun 2020 12:31 PM GMT

கொரோனா சிகிச்சை அளிக்கும் திறனை அதிகப்படுத்துவதற்காக, இந்திய ரயில்வேத்துறை 5231 ஏ.சி அல்லாத ரயில் பெட்டிகளை தனிமை பெட்டிகளாக மாற்றியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழி காட்டுதல்கள்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நோயாளிகளையும், கொரோனா நோயாளிகளையும் பராமரிக்கும் மையங்களாக இந்த ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை மற்றும் நிதி ஆயோக் உருவாக்கிய ஒருங்கிணைந்த கொரோனா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதிகள் உள்ளன. மாநிலங்களில் உள்ள படுக்கை வசதிகளில் நோயாளிகள் நிறைந்த பின் இவற்றை பயன்படுத்த வேண்டும்.

இந்த ரயில் பெட்டியை காற்றோட்டமுள்ள, இயற்கை வெளிச்சம் உள்ள இடங்களில் பயன்படுத்த வேண்டும். குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டால், அது குழாய் வழி ஏ.சியாக இருக்ககூடாது.

கொரோனா நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் முன்பே, ஏ.சி விஷயம் குறித்து நிதி ஆயாக் மற்றும் மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசிக்கப்பட்டது. ஏ.சி காற்று குழாய்கள் மூலம்கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், ஏ.சி பெட்டிகள் பொருத்தமாக இருக்காது என முடிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட, அதிகளவிலான வெப்பநிலை தேவை. மேலும் திறந்த ஜன்னல்கள் மூலமான காற்றோட்ட வசதி நோயாளிகளுக்கு பலன் அளிக்கும்.

உயர் நிலைக்குழு உத்தரவுப்படியும், விருப்பப்படியும், இந்த தனிமை ரயில் பெட்டிகள், கோவிட் பராமரிப்பு மையங்களாக செயல்படும். மிதமான மற்றும் அதிகமிதமான அல்லது தொற்று இருக்கலாம் என சந்தேகப்படும் கொவிட் நோயாளிகளுக்கு, இந்த ரயில் பெட்டிகளை பயன்படுத்தலாம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தயாரித்த கோவிட் ரயில் விதி முறைப்படி, கோவிட் ரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு அருகேயுள்ள பிளாட்பாரத்தில் ஒரு அவசர சிகிச்சை மையம் சுகாதாரத்துறையினரால் அமைக்கப்பட வேண்டும். ரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு இறுதியில், பொருட்களை மாற்றுவதற்கான அறைவசதி செய்யப்பட வேண்டும். நிரந்தரமாக இந்த வசதி இல்லை என்றாலும், தற்காலிக ஏற்பாட்டில் இந்த வசதி வழங்கப்பட வேண்டும்.

மாநிலத்தில் உள்ள படுக்கை வசதிகளில், நோயாளிகள் நிறைந்த பின்பே, இந்த ரயில் பெட்டி வசதிகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகள் ஜூலை மாத மத்தியில் தான் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான், நோய்பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News