Kathir News
Begin typing your search above and press return to search.

ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கலில் ஏற்பட்ட தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!

ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கலில் ஏற்பட்ட தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!

ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கலில் ஏற்பட்ட தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 3:46 AM GMT

ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என்றும், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜூலை 2017 முதல் ஜனவரி 2020ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்த தொழில் முனைவோருக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வரிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே நிலுவையில் இருந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 மாதங்களாக ஜிஎஸ்ட் கூட்டம் நடைபெறவில்லை.

கணக்கு தாக்கல் செய்து வரி செலுத்துவதங்றகான அவகாசமும் ஜுன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜுன் மாதம் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தொழில் வர்த்தகம் முடங்கியுள்ளதால் ஜிஎஸ்டி வரிகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கணக்கு தாக்கல் செய்து வரி செலுத்துவதங்றகான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜுன் மாதம் ஜிஎஸ்டி கூட்டம் நடத்துவது பயனில்லை என்றும் அதனால் ஜுலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அவசியம் அற்ற பொருட்கள் மீது வரியை உயர்த்த வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News