Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஒன்பது நாடுகள்.!

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஒன்பது நாடுகள்.!

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஒன்பது நாடுகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jun 2020 11:23 AM GMT

நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன் உள்பட ஒன்பது நாடுகள் கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறியுள்ளது. தற்போது நியூசிலாந்து நாட்டில் கொரோனா நோயாளி இல்லாததால் ஏழு வாரங்கள் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு விலக்கி உள்ளது. இதனை போல் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக உள்ளது என அதிபர் ஜான் மகுபூலி தெரிவித்துள்ளார்.

வாடிகன் நாட்டில் ஜூன் மாதம் 6ஆம் தேதி நிலவரப்படி 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களும் குணம் அடைந்துள்ளனர். இதனை போல் ஃபிஜி, மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகள் கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறியுள்ளது.

Source: https://www.polimernews.com/dnews/111822

Next Story