Kathir News
Begin typing your search above and press return to search.

தி இந்து நாளிதழில் ஆட்குறைப்பா? நோட்டீஸ் அனுப்பிய பிரஸ் கவுன்சில்.!

தி இந்து நாளிதழில் ஆட்குறைப்பா? நோட்டீஸ் அனுப்பிய பிரஸ் கவுன்சில்.!

தி இந்து நாளிதழில் ஆட்குறைப்பா? நோட்டீஸ் அனுப்பிய பிரஸ் கவுன்சில்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 11:19 AM GMT

தி இந்து நாளிதழ் அதன் மும்பை அலுவலகத்தில் பணியாற்றும் 20 பத்திரிகையாளர்களுக்கு அவர்களாக ராஜினாமா செய்யாவிட்டால் நிர்வாகத்தால் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை இந்திய பிரஸ் கவுன்சில் தானாக முன்வந்து விசாரிக்கிறது. பிரஸ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் இந்திய பிரஸ் கவுன்சில் சேர்மன், நீதிபதி சி கே பிரசாத் இதைப்பற்றி கவலை தெரிவித்துள்ளார்.

தி இந்து நாளிதழின் மும்பை பதிப்பு கடந்த 2015ம்‌ ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெரும்பாலான செய்தியாளர்கள் அவர்களாக ராஜினாமா செய்யவில்லை என்றால் நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அங்கு தொடர்ந்து பணிபுரிவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. தலைமையகத்திலிருந்து முறையாக தங்களுக்கு தகவல் எதுவும் வராது நிலையில் மும்பை அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்யப்படுவதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகும் செய்திகளைப் பற்றி தெளிவுபடுத்தக் கோரி 20 பத்திரிகையாளர்கள் N ராம், நவநீத், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சுரேஷ் நம்பத், பதிப்பாசிரியர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

"தி இந்து அலுவலகம் ‌பத்திரிகையாளர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட்டு பத்திரிகை சுதந்திரம் அளிக்கப்படும் சிறந்த பணியிடம் என்பதால் தான் கீழே கையொப்பமிட்டுள்ள அனைவரும் தி இந்துவில் பணி புரிய விரும்பினர்‌. கடந்த காலத்தில் தி இந்து நாளிதழ் பின்பற்றிய அதே கொள்கைகள் தற்போது ஒரு குழுவாக எங்களுக்கும் பொருந்த வேண்டும்.

தொழிலாளர் சட்டங்கள் மற்றும் அது மீறப்படும் சம்பவங்கள் குறித்து சிறப்பான முறையில் செய்தி வெளியிடுவதில் பெருமை கொள்ளும் தி இந்து நாளிதழ் இந்த சூழ்நிலையைப் பற்றி எங்களுக்கு தெளிவாக விவரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு அந்த மின்னஞ்சல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் கையொப்பமிட்டுள்ள 16 பத்திரிகையாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மீதி நான்கு பேரின் பெயர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

பிரஸ் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிப்பாசிரியர் மற்றும் மும்பை பிராந்திய பொது மேலாளர் ஆகியோரை இந்த விஷயம் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், " நிர்வாகம் அவர்களின் நிர்வாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றும் நியமனத்தின் போது கூறப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய‌ வழி வகுக்கும் தொழில்துறை பிரச்சினைகள் சட்டம், 1947 சேர்க்கப்படாததால் தீர்வு காண வழியின்றி தவிப்பதாகவும் எங்களது கவனத்திற்கு வந்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News