Kathir News
Begin typing your search above and press return to search.

எங்கிருந்து பரவியது கொரோனா? அமெரிக்க செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்.!

எங்கிருந்து பரவியது கொரோனா? அமெரிக்க செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்.!

எங்கிருந்து பரவியது கொரோனா? அமெரிக்க செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட  திடுக்கிடும் தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jun 2020 2:57 AM GMT

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பதைப் பற்றி பல யூகங்க் நிலவி வரும் நிலையில் அமெரிக்க‌ ஊடகம் ஒன்று அதன் விசாரணை அறிக்கையில் பேஷன்ட்-0 என்று‌ அழைக்கப்படும் முதன்முதலாக தொற்று ஏற்பட்ட நோயாளி, COVID-19 வைரஸைப் பற்றிய ஆராய்ச்சி நடந்த உகான் வைராலஜி கல்வி நிறுவனத்தின் ஆய்வுக் கூடத்தில் பணிபுரிந்தவர் என்றும், முதன்முதலில் இந்த வைரஸ் வௌவாலில் இருந்து அந்தப் பெண்ணுக்குத் தான் தொற்றியதாகவும் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பயோ ஆயுதமாக தயாரிக்கப்பட்டது அல்ல என்றும் வவ்வால்களில் இயற்கையாக காணப்படும் அது தற்செயலாக ஆய்வகப் பணியாளருக்கு தொற்றியதாகவும் அது தெரியாமல் அவர்‌ வுகான்‌ வாசிகளுக்கு பரப்பிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி உயிருள்ள உயிரினங்களை விற்கும் உகான் ஈர சந்தையில் இருந்துதான் கொரானா வைரஸ் பரவியதாக சீனா கூறியது ஆய்வகத்தின் மீது பழி விழாமல் தடுக்கவே என்றும், அந்த சந்தையில் வவ்வால்கள் விற்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா அளவிற்கும் அதற்கு மேலும் வைரஸ்களை கண்டறியவும் கட்டுப்படுத்தவும் சீனாவுக்கு திறன் உள்ளது என்று நிரூபிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியிலேயே COVID-19 வைரஸ் பற்றி ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மற்றொரு சர்வதேச செய்தி நிறுவனம் தயாரித்த அறிக்கையில், சீனாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஆட்கொல்லி வைரஸ்களையும் அவற்றால் பரவும் நோய்களையும் பற்றி ஆய்வு நடக்கும் உகான் வைராலஜி கல்வி நிறுவனத்தில் போதுமான அளவு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளது.

உகான் ஈர சந்தைக்கு அருகில் அமைந்துள்ள சீனாவின் முதல் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட ஆய்வகம் என்றாலும், அமெரிக்க அரசுத்துறை இந்த உயர் கட்டுப்பாட்டு பகுதியை பராமரிக்கும் அளவுக்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் புலனாய்வாளர்களுக்கு சீனாவில் பற்றாக்குறை இருப்பதாக எச்சரித்திருந்தது. முதல் தொற்று ஏற்பட்ட ஆய்வகப்‌ பணியாளர் முதலில் அவரது ஆண் நண்பருக்கு பரப்பியதாகவும் அவரிடமிருந்து ஒவ்வொருவராய்ப் பரவி உகான் ஈர சந்தைக்கு பரவி அங்கிருந்து லட்சக்கணக்கானவர்களுக்கு பரவக் காரணமாகி விட்டது என்றும் கூறப்படுகிறது.

இக்கருத்தை ஆதரித்து அமெரிக்க அதிபர்‌ டொனால்ட் ட்ரம்பும் உலகெங்கும் 1,50,000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் உகான் நகர வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் பரவியது என்பதைப் பற்றிய அறிக்கைகளை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

"குறிப்பிட்ட வகை‌ வௌவாலைப் பற்றி கூறுகிறார்கள்; ஆனால் அது அந்தப் பகுதியில் இல்லை. ஈர சந்தையிலும்‌ அது விற்கப்படவில்லை. அந்த வகை வௌவால் 40 கிமீ தள்ளி இருப்பதாகச் சொல்கிறார்கள். நிறைய விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. அவற்றைப் பற்றி விசாரணையும் நடந்து வருகிறது. எனவே நாம் இதைப்பற்றிய உண்மையைக் கண்டறியப் போகிறோம். இந்த வைரஸ் எங்கிருந்து வந்ததோ, சீனாவிலிருந்து எந்த உருவில் வந்ததோ, இப்போது 184 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23,31,892 எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,60,763 எனவும் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 7,38,913 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 39,015 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிலோ 82,735 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 4,632 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

Next Story