Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்தே பணிகளை செய்வது போல முதல்வரும் பாதுகாப்புடன் பணியாற்றவேண்டும்: பொது மக்கள் சார்பில் வேண்டுகோள்

பிரதமர் மோடி டெல்லியில் இருந்தே பணிகளை செய்வது போல முதல்வரும் பாதுகாப்புடன் பணியாற்றவேண்டும்: பொது மக்கள் சார்பில் வேண்டுகோள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 9:45 AM GMT

இந்தியாவில் கொரோனா தொற்று தொடங்கிய பிறகு ஆரம்பக் கட்டத்தில் இருந்தே பிரதமர் மோடி சமூக இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் பற்றி மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை முறையாக தான் பின்பற்றுவதுடன் மற்றவர்களுக்கும் அடிக்கடி கூறுகிறார். ஆயிரம் வேலைகள் இருப்பினும் நிதானத்துடன் ஒவ்வொன்றாக கடமையில் தன்னை கலந்து கொண்டு கூடுமானவரை தனது வீட்டிலிருந்தே பணிகளை செய்கிறார். அலுவலகத்துக்கு கூட அதிகம் செல்வதைக் தவிர்க்கும் அவர் நவீன தகவல் தொடர்பு கருவிகளை கொண்டே தினமும் மக்களுடன் மக்களாக கலந்து கொள்கிறார்.

கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் தன்னாலும், தன்னை சார்ந்தவர்களாலும் பிறருடைய சுகாதாரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத வகையில் வெளியில் செல்வதை முழுவதும் நிறுத்தியுள்ளார். சமீபத்தில் மேற்கு வங்கத்துக்கு மட்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளை மிகவும் எச்சரிக்கையுடன் சென்று பார்த்துவிட்டு எந்த இடத்திலும் எந்த தொடுதல்களுக்கும் வாய்ப்பில்லாத வகையில் கருகிய காலத்துக்குள் டெல்லி திரும்பினார்.

ஆனால் தமிழகத்தில் அதிமுக எம் எல் ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் முதல்வர் என எல்லோரும் மற்ற நாட்களைப் போல பம்பரமாக சுற்றி வருவதாகவும் என்னதான் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றிவருவதாக கூறினாலும் பல இடங்களில் இந்த இடைவெளி காணாமல் போவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியே வருகின்றன. அதிமுகவினர் மட்டுமல்லாமல் திமுகவினரின் மக்கள் தொடபு பணிகளும் பல இடங்களில் சமூக இடைவெளி இல்லாமல் காணப்படுவதாக செய்திகள் வெளி வருகின்றன. இந்த விஷயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெச்சரிக்கையாக தனது வெளி நிகழ்ச்சிகளை மிகவும் குறைத்துக் கொண்டு செயலாற்றுவதாகக் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பாக முதல்வர் எடப்பாடியார் கார் மூலம் சேலம் பகுதிக்கு சென்று திரும்பிய போது அவருடைய பயணத்தின் போது நிகழ்வுகளில் அதிக அளவில் பங்கேற்பாளர்கள் கூடியது ஆபத்தானது எனவும் செய்திகள் வந்தன.

அதே போல அவர் திரும்பி வரும்போது வழி நெடுகிலும் அவருடைய பாதுகாப்பு வாகனங்களாலும், உள்ளூர் கட்சிக்காரர்களின் வாகனங்களாலும் சாலைகளில் அதிக அளவில் போக்கு வரத்து காணப்பட்டதாகவும், பல இடங்களில் உள்ளூர் மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டதுடன் ஆங்காங்கு 2 மணி நேரம் அளவுக்கு சாலை போக்கு வரத்து பாதிப்படைந்ததாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டு வரும் செய்திகள் அறிந்து மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். முதல்வருக்கு சோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என அறியப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியே. என்றாலும் அவர் பாதுகாப்புடன் பணியாற்றவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அவருடன் நூற்றுக்கணக்கில் வரும் அலுவலர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது. முதல்வர் வெளியே வரும்போது அவர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருவதால் அங்குள்ள வெளியூர் மக்கள் தங்கள் பகுதிக்கும் சென்னையைப் போல தோற்று ஏற்பட்டு விடுமோ என பயப்படுகிறார்கள்.

இந்த நிலையில் முதல்வர் வரும் 26ஆம் தேதி திருச்சிக்கு வருகை தருகிறார் என்றும் அவர் இங்கிருந்து டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார் என்றும், அத்துடன் அவர் அரசு அலுவலர்களை சந்தித்து ஆலோசனை செய்யது விட்டு பின்னர் முக்கொம்பு மேலணை, கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை பார்வையிட போவதாகவும் செய்திகள் வந்துள்ளன. .

இதனால், திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில்தான் அரசு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது இக்கட்டான சூழ்நிலையை உருவாகியுள்ளது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து திருச்சி வருகை தருவதால், அவருடன் உதவியாளர்கள், அரசு அலுவலர்கள், பாதுகாவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து திருச்சிக்கு வருகை தரவுள்ள நிலையில், இங்கும் நூற்றுக்கணக்கில் அலுவலர்கள், மக்கள் என கூடும் நிலையில் திருச்சி நகரில் கொரோனா எங்கே குடி புகுந்துவிடுமோ என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக திருச்சி உள்ளூர் பத்திரிகை ஓன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/briefs/brief-news/chief-minster-edapadi-palanisamy-trichy-visit/tamil-nadu20200624001455473

Next Story