Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா காலத்திலாவது கொஞ்சம் மனசாட்சித்தன்மை இருக்கா? இறப்பை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்சின் ஈன புத்தி!

கொரோனா காலத்திலாவது கொஞ்சம் மனசாட்சித்தன்மை இருக்கா? இறப்பை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்சின் ஈன புத்தி!

கொரோனா காலத்திலாவது கொஞ்சம் மனசாட்சித்தன்மை இருக்கா? இறப்பை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்சின் ஈன புத்தி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 10:08 AM GMT

ஒருவரின் சாவை வைத்து அரசியல் நடத்துவதில், காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலைசிறுத்தை, கம்யூனிஸ்ட் ஆகியவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது ஊரறிந்த உண்மை. கொரோனா காலத்திலாவது கொஞ்சம் மனசாட்சித்தன்மையோடு நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த தந்தை மகன் குடும்பத்தினரிடம் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி திங்கள்கிழமை நேரில் வந்து ஆறுதல் கூறினார்.

காங்கிரஸ் சார்பில் ரூ 10 லட்சம் காசோலை வழங்கினார்.அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மயூரா ஜெயக்குமார். மாநில இளைஞர் முதன்மைச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ், வசந்தகுமார் எம்.பி, முன்னாள் எம் பி தனுஸ்கோடி ஆதித்தன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த செயல் எப்போதும் வழக்கமாக நடப்பது தானே? மற்ற கட்சிகள் பிரமுகர்கள் இதனை செய்யவில்லையா? பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியது நல்ல செயல் தானே என்று நினைக்க தோன்றும்.

பின்னால் நடந்த அரசியல் சூழ்ச்சி பற்றி தெரிந்தால், பொதுமக்கள் காரி உமிழ்வார்கள். காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த தந்தை மகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க செல்கிறோம் என்று கூறி, செய்தித்தாளில் முழு பக்க அளவுக்கு விளம்பரம் கொடுத்து, தம்பட்டம் அடித்திருக்கின்றனர்.

ஒருவரின் இறப்பைக்கூட தங்கள் அரசியல் லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் இவர்களைப்போன்ற அரசியல்வாதிகளா மக்கள் பிரச்சனை குறித்து கவலைப்பட போகிறார்கள்.

அந்தக்காலத்திலேயே முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் இறப்பை வைத்து அரசியல் செய்த வரலாற்று பின்னணி கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர். ஒரு முன்னாள் பிரதமருக்கே அந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு சொல்லவா வேண்டும்?






Next Story
கதிர் தொகுப்பு
Trending News