Kathir News
Begin typing your search above and press return to search.

அம்மாவிற்கு மணப்பெண் தோழியான வனிதாவின் மகள்; திருமண தேவதையாக ஜொலிக்கும் வனிதா.!

அம்மாவிற்கு மணப்பெண் தோழியான வனிதாவின் மகள்; திருமண தேவதையாக ஜொலிக்கும் வனிதா.!

அம்மாவிற்கு மணப்பெண் தோழியான வனிதாவின் மகள்; திருமண தேவதையாக ஜொலிக்கும் வனிதா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 3:37 AM GMT

நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா தனது குடும்பத்திடம் ஏற்பட்ட சண்டை காரணமாகவும், ஏற்கனவே இரண்டு கணவர்களை விவாகரத்து செய்து விட்டதாலும் தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதாவுக்கு மூன்றாவது திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து social மீடியாவில் பத்திரிக்கை வெளியாகி வைரல் ஆனது. ரசிகர்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்த வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.


பிக் பாஸ் மூலம் பட்டி,தொட்டி எல்லாம் பிரபலமடைந்ததோடு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்திவந்தார். லாக்டவுன் காரணமாக யூடியூப் சேனலில் சிக்கலில் மாட்ட அதற்கு உதவ வந்த பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்தது. மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பாலின் காதலை ஒப்புக் கொண்டார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வனிதாவின் வீட்டில் பீட்டர் பால் மற்றும் வனிதாவிற்கு மிக எளிமையாக கிறிஸ்தவ முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் முக்கியமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். வனிதாவின் பெற்றோரான விஜயகுமார்- மஞ்சுளா விற்கு இன்று திருமண நாள் என்பதாலும் வனிதா இன்று பீட்டர் பாலை மணக்க முடிவெடுத்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News