Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் சிறந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சு கொரோனாவால் பாதிப்பு.!

உலகின் சிறந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சு கொரோனாவால் பாதிப்பு.!

உலகின் சிறந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சு கொரோனாவால் பாதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 2:11 AM GMT

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. பின்னர் அவருடைய மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணத்தினால் பாதிக்கப்பட்ட டென்னிஸ் வீரர்களுக்கு உதவும் வகையில் ஜோகோவிச்சு டென்னிஸ் போட்டியை சில நாட்களுக்கு முன்பு நடத்தியுள்ளார். அதில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் கலந்துகொண்ட பல்கேரியா வீரர் பல்கேரிய வீரர் டிமிட்ரோவ்வுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த போட்டிகளில் கலந்து கொண்ட போர்னா கோரிக், விக்டர் டிரோய்க்கி போன்றவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தற்போது ஜோகோவிச்சுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவருக்கும் அவருடைய மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.


ஆனால், அவருடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதை தொடர்ந்து இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Next Story