Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா திட்டம்.!

அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா திட்டம்.!

அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா திட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jun 2020 7:53 AM GMT

ஜார்ஜ் ப்ளாய்ட் என்கிற ஆப்பிரிக்கா அமெரிக்கரின் மரணத்திற்கான அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதற்கு பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா முயற்சி செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

அல்கொய்தா அமைப்பின் ஆன்லைன் பத்திரிகையான 'ஒன் உம்மா' சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில் மரணம் அடைந்த ஜார்ஜ் ப்ளாய்ட்டின் கடைசி நேரத்தின் புகைப்படமும், பிரபல சுவர் ஓவியரான பேங்க்சியின் ஓவியமும் வெளியிட்டது.

பின்பு அந்த கட்டுரையில் கூறியது: அமெரிக்க அரசு இனவெறிக்கு ஆதரவு அளிக்கிறது. இதனால், அமெரிக்காவின் அரசியல் தலைமையும், பொருளாதார அமைப்பும் அழியும். அமெரிக்காவில் ஆயுததுடன் போராட்டமும், உள்நாட்டு போர் போன்றவை நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஜனநாயக கட்சி கூட அமெரிக்கர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆனால், நாங்கள் உதவி செய்வோம். ஒடுக்கப்படுவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த போராட்டத்தை அல்கொய்தா அமைப்பு தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளவதற்கு இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இல்லாதவர்களை அணுகி வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல் அமெரிக்கர்களை இஸ்லாம் மதத்திற்கும் மற்றும் அதணின் செய்யப்பட்டிற்கும் மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள் என அமெரிக்க பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2555791

Next Story