Kathir News
Begin typing your search above and press return to search.

இது கதை அல்ல புதிர் உங்களால் விடை சொல்ல முடியுமா? உற்சாகமாக இருக்க வழியென்ன?

இது கதை அல்ல புதிர் உங்களால் விடை சொல்ல முடியுமா? உற்சாகமாக இருக்க வழியென்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jun 2020 1:38 AM GMT

தீவு ஒன்றில் வாழ்ந்த மக்கள் எப்போதும் மீன்களை உண்ண விரும்பினார்கள். எதிர்பாராத விதமாய் அவர்களை சுற்றி நீர் இருந்தது ஆனால் மீன் இல்லை. அந்த தீவில் வாழ்ந்த மக்களின் உணவு தேவையை போக்க மீன்கள் தேவையாயிருந்தன. எனவே சிறிய அளவில் இருந்த படகுகள் பெரிதாக உருவாக்கப்பட்டது. எப்போதும் செல்கிற தூரத்தை விடவும் அந்த மீனவர்கள் சற்று அதிகமாக சென்று மீன்களை பிடிக்க முயன்றனர்.

எத்தனை தூரம் நீருக்குள் செல்கிறார்களோ அத்தனை தூரம் திரும்ப வேண்டும் இல்லையா...? திரும்ப வரும் தூரம் அதிகமாக இருந்ததால் மீன்கள் நல்ல நிலையில் இருக்கவில்லை. அதன் தரம் குறைந்துவிட்டது.

இந்த மக்களின் தேவையை புரிந்த மீன்பிடி நிறுவனமொன்று அத்தீவினில் கால்பதித்து, மீன் பிடிக்க செல்லும் படகுகளில், மீனை பதப்படுத்தும் உறைப்பெட்டிகளை(freezers) வைத்தனர். இதனால படகுகள் நெடும்தூரம் செல்ல முடியும் மீன்களை பாதுகாக்க முடியும். ஆனாலும் கூட அந்த தீவு மக்களுக்கு உயிருடன் இருக்கும் மீன்களை உண்பதற்க்கும் உறையவைத்த மீனை உண்பதற்குமான வித்தியாசம் தெரிந்தது. அவர்கள் புதியதையே விரும்பினார்கள். உறைய வைக்கப்பட்ட மீன்களை மிகுவும் குறைந்த விலைக்கே வாங்கினார்கள். இந்த பிரச்சனைக்கான தீர்வை யோசித்த மீன்பிடி நிறுவனம் அடுத்த யோசனையை நடைமுறைப்படுத்தியது.

படகுகளில் உறைப்பெட்டிகளுக்கு பதிலாக பிரமாண்ட மீன் தொட்டிகளை நிறுவினார்கள். மீன்களை பிடித்து இந்த நீர் தொட்டியில் விட்டார்கள். சில நேரம் நன்றாக நீந்தி சென்ற மீன்கள், தொட்டியின் சுவர்களில் சில முறை மோதியதில் அதன் அசைவுகளை குறைத்து கொண்டன. மீன்கள் மிகம் சோர்வுடன், சுறுசுறுப்பின்றி அசைவுகள் குறைத்து உயிர் வாழ்ந்தன. ஆச்சர்யமாக உற்சாகமற்ற இந்த மீன்களையும் அந்த மக்கள் விரும்பவில்லை.

காரணம் பல நாட்களாக மீன்கள் அசைவுகளின்றி நீரில் மிதக்கின்றன. உயிர் மட்டுமே இருக்கிறது. துள்ளல் நிறைந்த மீனின் சுவை இதற்க்கு இல்லை என்பதை அம்மக்கள் உணர்ந்திருந்தார்கள்.

இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு....? உயிருள்ள புத்தம் புதிய மீனின் சுவையை எப்படி இந்த மக்களுக்கு வழங்குவது...? ஆழ்ந்த யோசனைக்கும், ஆய்வுக்கும் பின் அந்த மீன் பிடி நிறுவனம் கண்டறிந்த தீர்வு இது.......

"இப்போதும் அவர்கள் மீன்களை நீர் தொட்டியில் தான் விடுகிறார்கள். ஆனால் இப்போது அந்த மீன்களுடன் ஓர் குட்டி சுறாவும் அந்த தொட்டியில் உண்டு. அந்த சுறா சில மீன்களை தின்றாலும்..... ஊர் வந்து சேரும் போது பெரும்பாலான மீன்கள் உயிர்ப்புடனும் உற்சாகத்துடனும் இருந்தன. மீன்கள் சவால் நிறைந்த சூழலில் இருந்ததே அதன் உற்சாகத்திற்க்கும், புத்துணர்வுக்கும் காரணம்."

நாமும் பல நேரங்களில் உத்வேகமற்ற நிலையில் ஓர் சிறு குட்டைக்குள் இருப்பதை போல் உணர்ந்திருக்கிறோம் இல்லையா....? அப்படியானால் நம் வாழ்விற்க்கு கட்டாயம் தேவை சுறா மீன்கள். சுறாக்களை ஒத்த சவால்களை எதிர்கொள்வதன் மூலம் உற்சாகமும், உத்வேகமும் பாய்ந்தெழும் என்றால்...யாருக்குத்தான் பிடிக்காது சுறா மீன்களை, மன்னிக்கவும் சவால்களை!!!!!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News