Kathir News
Begin typing your search above and press return to search.

தோஷம் உள்ளவர்கள் காசியை நோக்கி செல்ல காரணம் என்ன? காலபைரவர் யார்?

தோஷம் உள்ளவர்கள் காசியை நோக்கி செல்ல காரணம் என்ன? காலபைரவர் யார்?

தோஷம் உள்ளவர்கள் காசியை நோக்கி செல்ல காரணம் என்ன? காலபைரவர் யார்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jun 2020 2:06 AM GMT

கால பைரவர் ஹிந்துக்கள் வழிபடும் தெய்வங்களிலேயே மிகவும் உக்கிரமான தெய்வமாக கருதப்படுகிறார். சிவனின் ருத்ர அம்சமான இவரை யோகிகள் மற்றும் சித்தர்கள் தீவிரமாக வழிபடுகிறார்கள். கால பைரவரை மிகவும் கவனத்தோடு வழிபட வேண்டும் ஏனென்றால் அவர் மிகவும் உக்கிரமானவர், அதே சமயம் முறையாக வழிபட்டால் எல்லா வளங்களையும் நமக்கு அளிப்பர்.

வாழ்வில் ஏற்படும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கும் தெய்வமாக காலபைரவர் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் பலவீனங்களில் இருந்து விடுபட்டு வெற்றியை நோக்கி செல்லலாம். கால பைரவர் நமது லட்சியங்களை நோக்கி பயணிக்க தெளிவான பாதையை உருவாக்கி தருவார். கால பைரவரை வியாழக்கிழமை மற்றும் சனி கிழமை நாட்களில் வழிபடுவது நன்மையை தரும். குறிப்பாக வளர்பிறையில் வரும் பிரதோஷத்தன்று விளக்கேற்றி வழிபடுவது சகல செல்வங்களையும் வெற்றியையும் பெற்றுத்தரும்.

அந்த பிரதோஷ நாள் சனிக்கிழமைகளில் வந்தால் இன்னும் சிறப்பானது. அந்த நாளில் செய்யும் பிராத்தனை நிச்சயம் பலிக்கும். கால பைரவர் காசியில் நிரந்தரமாக குடி கொண்டிருப்பதாக ஐதீகம். ப்ரம்மாவின் தலையை வெட்டியதால் ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு பிறகு கடுமையான தவம் புரிந்து காசியில் உள்ள கங்கையில் குளித்து காசியிலேயே அவர் தங்கி விட்டதாக நம்பப்படுகிறது. இதனாலேயே தோஷம் உள்ளவர்கள் காசியை நோக்கி செல்கிறார்கள்

ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் அஷ்டமி அன்றும் திங்கள் கிழமைகளிலும் கால பைரவராக வழிபடுவது சிறந்தது. கால பைரவர் ருத்ர அம்சம் என்பதால் அவரை குளிர்விக்க வில்வ இலைகளை கொண்டு கட்டப்பட்ட மலைகளை அணிவிக்கலாம். அதே போல் சிவப்பு நிற அரளி பூக்களை கொண்டு வழிபடுவது கால பைரவருக்கு மிகவும் உகந்தது. தினமும் அதிகாரியும் பிரம முஹூர்த்தத்தின் போது குளித்து விட்டு காலா பைரவரின் காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதை ஞாயிற்று கிழமை நாளில் தொடங்குவது சிறந்தது

"ஓம் கால பைரவாய வித்மஹே காலாதீதய தீமஹி தந்நோ கால பைரவ ப்ரசோதயாத் " எனும் இந்த மந்திரத்தை கால பைரவரை நினைத்து பூரண பக்தியுடன் கூறி வந்தால் அனைவருக்கும் கால பைரவரின் அருள் கிடைக்கும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News