Kathir News
Begin typing your search above and press return to search.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு!

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு!

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2020 5:35 AM GMT

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினராவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படுள்ளதாக தொழிலாளர் நல ஆணையர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன். இந்த நலவாரியங்களில் தொழிலாளர்கள் உறுப்பினர் ஆக பதிவு செய்வதற்கு நேரடியாக செல்ல வேண்டி இருந்தது.

கொரோனோ ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு தற்பொழுது தொழிலாளர்கள் பதிவுசெய்ய ஏதுவாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி - https://labour.tn.gov.in

என்ற முகவரியில் இனி தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம், நேரில் வர அவசியம் இல்லை என அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story