Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவில் இளைஞர்களை குறி வைத்துத் தாக்கும் கொரோனா வைரஸ்.!

அமெரிக்காவில் இளைஞர்களை குறி வைத்துத் தாக்கும் கொரோனா வைரஸ்.!

அமெரிக்காவில் இளைஞர்களை குறி வைத்துத் தாக்கும் கொரோனா வைரஸ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Jun 2020 1:45 AM GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்காவில் 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அமெரிக்கா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இதனால் அமெரிக்க அரசு சீனாவை குற்றம்சாட்டி வருகிறது.

தற்போது அமெரிக்காவில் உணவகங்கள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தேவாலயங்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களிடையே கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளது .

இதனைப் பற்றிய சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறியது: கொரோனா வைரஸ் அதிகம் இருந்த போதிலும் கடந்த மாதம் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தேவாலயங்கள் போன்றவற்றை திறந்தனர். இதனால் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது. இந்த இடங்களுக்கு செல்லும் இளைஞர்கள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதில் குறிப்பாக ப்ளோரிடோ, டெக்ஸாஸ், அரிசோனா மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ப்ளோரிடோவில் சென்ற வாரம் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் 30 சதவீதம் பேர் 15 முதல் 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் இளைஞர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News