Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவ செலவிற்கு பணம் கேட்ட பொன்னம்பலம் மருத்துவமனைக்கு பணம் அனுப்பி வைத்த 'தல அஜித்'.!

மருத்துவ செலவிற்கு பணம் கேட்ட பொன்னம்பலம் மருத்துவமனைக்கு பணம் அனுப்பி வைத்த 'தல அஜித்'.!

மருத்துவ செலவிற்கு பணம் கேட்ட பொன்னம்பலம் மருத்துவமனைக்கு பணம் அனுப்பி வைத்த தல அஜித்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 2:32 AM GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் பல உதவிகள் செய்து வந்தாலும் இவர் செய்த உதவிகள் அஜீத் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்ற உயர்ந்த எண்ணம் வைத்திருப்பவர். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு சத்தமில்லாமல் உதவி செய்வார் இவர். தீவிர சிகிச்சையால் மீண்டு வந்த பொன்னம்பலம் ஒரு மலரும் நினைவுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார் அது என்னவென்றால் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவியை குறித்து கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 90's களில் பொன்னம்பலம் முன்னணி வில்லனாக வலம் வந்தவர். இவருக்கு சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதை அறிந்த நடிகர் கமல்ஹாசன் இவருக்கு உதவி செய்தார். அவரை அடுத்து, நடிகர் ரஜினிகாந்த் இவருடைய சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பண உதவியை ஏற்றுக்கொண்டார். இந்த செய்தி சில நாட்களுக்கு முன்பு வந்த வண்ணம் இருந்தன. இவர்களைத் தவிர வேறு யாரும் எனக்கு உதவி செய்யவில்லை என்று இவர் குற்றச்சாட்டை கூறினார். ரசிகர்கள் கூட அவ்வப்போது 100,500 ரூபாய் என்று பணம் அனுப்பினார் என்று கூறியிருந்தார் .

சமீபத்தில் உடல் நலம் தேறி உள்ள பொன்னம்பலம் பேட்டி ஒன்றில் முன்பு செய்த உதவியை நினைவு கூறும் வகையில் 'அமர்க்களம்' படப்பிடிப்பின்போது தனது நண்பர் மகனின் சிகிச்சைக்காக தல அஜித் இடம் பணம் கேட்டிருந்தாராம். மதிய உணவு இடைவேளையின் போது அஜித்தை பார்த்த பொன்னம்பலம், அவரிடம் ஜி நான் கேட்டேனே என்று இவர் கேட்க அதற்கு தல அஜித் நான் "காலையிலேயே ஹாஸ்பிடலுக்கு பணத்தை அனுப்பி வைத்துவிட்டேன்" என்று கூறியிருப்பது. பொன்னம்பலத்திற்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது என்றார். இவர்போல் ஒரு நல்ல உள்ளத்தை பார்க்கவே முடியாது என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.

தற்போது பொன்னம்பலம் தல அஜித்தை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News